பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

203


வேண்டும். அப்பொழுது தமிழும் பாரதத்தின் தேசீய ஆட்சி மொழிகளுள் ஒன்றாகும். நாம் இப்படிக் குறிப்பிடும்பொழுது, ஆங்கிலத்தைப் புறக்கணித்து விடவேண்டுமென்று கருதுவதாக யாரும் நினைக்கவேண்டாம். நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கும், தொழிலியல் வளர்ச்சிக்கும் ஆங்கிலம் மிக மிக இன்றியமையாத ஒன்று. இந்தி பொது அல்லது உறவுமொழியாகவும், ஆங்கிலம் அறிவியல் துறைப் பயிற்சிக்குரிய துணை மொழியாகவும், தமிழ் தாய்மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இருக்கவேண்டும் என்பதே நமது கருத்து. இத்துறையில் பெரியார் அவர்களுடைய கருத்து நம்முடைய கருத்துடன் ஒத்திருக்குமென்றே நம்புகின்றோம்.

தமிழர் நலம் விழைவாளர்

தமிழகத்தின் ஆட்சி மனைகளில் தமிழர்கள் நிறை இடம்பெற வேண்டுமென்பதும் தமிழர்கள் எல்லாத் துறையிலும் பெருமை பெறவேண்டுமென்பதும், பெரியார் அவர்களுடைய பெருவிருப்பம்.

இத்துறையில் மக்கட் சதவீதத்தை அடிப்படையாக வைத்து, உத்யோகங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்பது பெரியார் அவர்களுடைய கொள்கை; இக்கருத்தும், பரவலாக எல்லோரும் உரிமை பெற்று வாழவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, ஒத்த கொள்கையாகவே இருக்கவேண்டும். இதுபோன்ற பல்வேறு துறைகளில் தம்முடைய துணைக்கொள்கைகளை உறுதிப்படுத்தி வளர்த்து வருகின்றார். அதோடு தாம் விரும்பும் புதுமையும், பொதுமையும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க சமயநெறி முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று பெரியார் நம்புகிறார்.

சமயப் பகைவரா?

மதம், மனித இனத்தின் அறிவை மறைக்கிறது; மயக்குகிறது, மனித இனத்தின் முன்னேற்றத்திற்குப் பெரிய இடை