பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

205



மக்களின் மடாதிபதி

“கடவுளைக் கூடக் கண்டுவிடலாம்; ஆனால் மடாதிபதிகளைக் காண முடியாது” என்று பெரியார் அவர்கள் கூறுகின்றார். அப்படி ஒரு காலம் இருந்தது. மடத்தின் நான்கு சுவர்களுக்குள் இருந்த என்னை, வெளியே இழுத்துவிட்டவர், தலைவர் பெரியார் அவர்கள் ஆவார்.

பண்பாளர் பெரியார்

தலைவர் பெரியார் அவர்களிடத்தில் எல்லோரும் பாராட்டத்தக்க சில சிறப்பியல்புகள் நிறைந்துள்ளன. தெளிவான சிந்தனையாளர். எவ்விதமான கருத்துக்களையும் நடைமுறையில் காணமுயற்சிப்பவர். பருவம், மடி, மானம், கருதாமல் குடிசெயல் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர். தம்மோடு கருத்திலே மாறுபட்டவர்களிடத்திலும் மரியாதையும், பெருமையும் கொடுக்கும் சிறந்த குணத்தினர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். எல்லாவற்றிற்குமேலாகக் குறிக்கோள் ஒன்றையே கருத்தில் கொண்டு வாழ்பவர்.

இனநலக் கொள்கையாளர்

இனநலத்தைக் காக்கின்ற முயற்சியில், அவர் அயராது பாடுபட்டுள்ளார். ஆட்சித்துறையிலும், மற்றெல்லாத் துறைகளிலும் தமிழர் சிறப்பெய்த வேண்டுமென்பதே அவருடைய கவலை. இன்றையத் தமிழகத்தின் ஆட்சி முதல்வர் திரு. காமராசர் அவர்கள், தமிழினத்தின் நலன்களைக் காப்பதில், அவைகளைக் கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதில் கடமைகளை இயற்றி வருகிறார் என்பதைத் தன்மானம் படைத்த தமிழர் எவரும் ஒத்துக்கொள்வர்.

“வீதி தோறும் இரண்டொரு பள்ளிகள், வீடுகள் தோறும் கலையின் விளக்கம்” என்ற கவிஞன் பாரதியின்