பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதிகமாகி விட்டதால் மீண்டும் ஒருமுறை விவாதிப்போம் என்று கூறி நண்பர் ஜீவா அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். காரைக்குடி சென்றபிறகு, அங்கு நண்பர் கே.எம். சுப்பையா அவர்களிடம், "சுவாமி அவர்களிடம் கடுமையான முறையில் விவாதித்துவிட்டேனோ? அவர்கள் வருத்தப்படுவார்களோ?" என்று கேட்டிருக்கிறார். இவ்வளவு குழைந்த அன்பை ஜீவா அவர்களிடத்தில்தான் பார்க்க முடிந்தது. இனிமேலும் யாரிடமும் பார்க்க முடியுமா என்பது ஐயப்பாடே!

நாகரிகமாகவும் கருத்தோட்டத்துடனும் விவாதிப்பதில் ஜீவா அவர்கள் சிறந்து விளங்கினார். அவருடன் விவாதிப்பதில் பல்கலைக் கழகத்தில் படிப்பதையொத்த அறிவு, கிடைக்கும். ஆதலால் பட்டிமன்றங்களில் அவரை எதிர்க்கட்சியாகவைத்து விவாதிப்பதில் எனக்கு அதிக ஆசையுண்டு. ஆண்டுதோறும் தேவகோட்டையில் நடைபெறுகின்ற திருவள்ளுவர் விழாவில் ஓராண்டு நானும் அவரும் எதிர்-பிரதி கட்சியாக இருந்து விவாதித்தோம். தலைப்பு, "வள்ளுவர் மிகுத்துக் கூறியது அரசியலா சமயமா? என்பது, யார் யார் எந்தக் கட்சியில் இருந்து பேசினோம் என்பதைக் குறுப்பிடவேண்டிய அவசியமில்லை. விவாதம் மிக நன்றாக இருந்தது. என்னைவிடக்கூட ஜீவா அதிகமாக உழைத்துப் பேசினார்; பட்டி மன்றம் முடிந்த பிறகு வழித்தங்கல் மனையில் தங்கி உரையாடிக் கொண்டிருந்த பொழுது, “நீங்களும் நானும் எதிர்க்கட்சியாக இருந்து விவாதிக்கக் கூடாது; அத்தகையதொரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தர்ம சங்கடத்தைத் தராதீர்கள்” என்றார். இங்ங்னம் அவர் கூறியது நம்மீது உள்ள அன்பின் மிகுதியாலேயே என்பதை அவரது குரல் காட்டிற்று.

இவ்வாறு தம்முடைய அன்புச் சுவட்டைப் பதித்து அவர் பழகிய பழக்கத்தின் ‘நினைவலைகள், இன்னும் மோதிக் கொண்டிருக்கின்றன. நினைத்தாலும் நெஞ்சு உருகு