பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

211


கின்றது. கண்களில் நீர் நிறைகிறது, ஏக்கம் பிறக்கிறது. தமிழகம் முழுதும் பரந்த-பரவிய ஜீவாவின் புகழ் மிக்க பண்பு கூற்றுவனின் செவிக்குக் கேட்டு அவரோடு பழக வேண்டும் என்ற பொங்கியெழும் பேராசையால்தான் அவரைக் கொண்டு சென்றானோ என்னவோ? கூற்றுவன் அவரை நம்மிடமிருந்து பிரித்தாலும் அவர் நம்மிடையே விட்டுச்சென்ற கொள்கை களைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றுவதன் மூலம் அவரை எண்ணத்தால் உணர்வால் என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்க முடியும். ஆம். அந்த முயற்சியில் நாம் ஈடுபடுவோக!


39. [1]இனிய பண்பினர்

“புரவலன் போலும் தோற்றம் உரல் கொள இரவன் மாக்களின் பணிமொழி பயிற்றி” என்பது இலக்கியம். புரவலன் போன்ற தோற்றம். பீடுநடை, எனினும் மற்றவர் களிடத்தில் பழகும் பொழுது இனிய எளிய அடக்கமான் பண்பு. இது வாழ்க்கையில் வெற்றி பெறுதற்குரிய அடிப்படைச் சாதனம். இந்த இலக்கிய நெறியில் நின்று வாழ்ந்தோர் உண்டோ இல்லையோ, நண்பர் ஜீவா அவர்கள் இந்த நெறி நின்று வாழ்ந்தவர். மனித சமுதாயம், கோடானு கோடி மக்களால் ஆய கூட்டமேயாகும். பல்வேறுபட்ட உணர்வுடையவர்கள் கருத்துடையவர்கள், சித்தாந்தமுடையவர்கள், மக்கட் சமுதாயத்தில் இருப்பார்கள். இருப்பது இயற்கை. வேற்றுமை உலகத்தியற்கை. வேற்றுமைகளை உள்ளடக்கி, விழுமிய ஒருமைப்பாட்டினை உருவாக்கி - வளர்த்துப் போற்றுதல் மனிதனின் கடமை. இக்கடமையை நிறை வேற்றும் முயற்சியில்தான் மனிதன் பூரணத்துவம் பெறுகிறான். எனக்கும் அவருக்கும் வேற்றுமையுண்டு; <span title="என்


கொள்கைக்கும்">என்


  1. பொங்கல் பரிசு