பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


<span title="என்


கொள்கைக்கும்">கொள்கைக்கும் அவருக்கும் வேறுபாடுண்டு என்று கதறி, கருத்து வேறுபாட்டை காழ்ப்பு வழிப்பட்ட பகைமைச் சேற்றினை உருவாக்கி அச்சேற்றிலே விழுந்து புரண்டு காலப்போக்கில் கருத்தையே மறந்து கலகக் களத்தில் மடியும் எண்ணற்ற பேர்களைக் காண்கிறோம். இயற்கை நியதியின்படி வேற்றுமையின் பரிணாம வளர்ச்சியும் பயனும் ஒருமைப்பாட்டைப் பெறுதலும் இன்பந் தருதலுமேயாகும். உலகின் திசையனைத்திலும், தோன்றிய தத்துவங்கள், சித்தாந்தங்கள், இலக்கியங்கள் ஆகியவைகளை ஆராப் பசியோடு கற்றுத் தெளிந்தவர் நண்பர் ஜீவா. அவர் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் அவருக்கிருந்த பற்று, அளப்பரியது எனினும் அவர் தன்னுடைய வாழ்க்கையினை கம்யூனிஸ்ட் கட்சி என்ற சுவருக்குள்ளேயே ஒடுக்கி அடக்கி விடவில்லை. எல்லாக் கட்சி அன்பர்களோடும் பழகினார். எல்லாக்கட்சி மேடைகளிலும் பேசினார், சமய விழாக்களிலும் கூட அவர் கலந்து கொண்டு பேசினார். அப்பரடிகளின் தேவாரத்தையும், கம்பனின் இராமகாதையையும், வடலூர் வள்ளலாரின் திரு அருட்பாவையும் பற்றி அவர் பேசும்பொழுது, இலக்கியச் சுவைததும்பும். உணர்விற் சிறந்த உருக்கத்துடன் பேசுவார். அதே காலத்தில் இலாவகமாகத் தன்னுடைய வாழ்க்கைச் சித்தாந்தமாக இருக்கின்ற பொதுவுடமைச் சித்தாந்தத்தோடு இவர்களின் கருத்துக்களை இணைத்துச் சேர்த்து மக்கள் முன்வைக்கின்ற அழகு அலாதியானது.

ஜீவா அவர்களின் வாழ்க்கை இனவழிப்பட்ட சுய மரியாதையில் தொடங்கி, தேசீயத்தில் தங்கி, பொதுமையில் கலந்திருக்கிறது. அவர் நூற்றுக் கணக்கான? மேடைகளில் சொன்னார், ‘மனிதன் வளர்ந்து கொண்டிருக்கிறான். அவன் தனது பூரணத்துவத்தை நோக்கி நடைபயிலுவதே வாழ்க்கை முறை’ என்றெல்லாம் ஜீவா அளவில், மண்ணுலக வாழ்க்கையிலேயே பூரணத்துவத்தைப் பெற்றிருந்தார். அவர் மேற்