பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

217



அண்ணாவின் புகழொளியின் துணைகொண்டு அவர் - விட்டுச் சென்ற கடமைகளை மேற்கொண்டு அவர் வழியில் நடைபயில உறுதி கொள்வோமாக!


41. [1]பல நூறு பிறைகண்டு வாழ்க!

“நுண்மாண் நுழைபுலம் இல்லான்
எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று”

–குறள் 407

என்பது திருக்குறள். நுண்மாண் நுழைபுலம் உடையார் மிகமிகச் சிலரே. கழகப்புலவர் ஐயா அவர்கள் நுண்மாண் நுழைபுலம் உடையவர்கள். கடலனைய தமிழிலக்கியங்களை துணுக்கமாகக் கற்றிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பாடல்கள் மனப்பாடம். இந்தவகையில் ஐயா அவர்களுக்கு அவர்களே நிகர்.

நச்சினார்க்கினியர், சேனாவரையர், மாதவச் சிவஞான முனிவர் ஆகிய உரையாசிரியப் பெருமக்கள் காலத்தில் நாம் வாழும் பேறுபெற்றிலோம். ஆனால் உரைவளம் பல படைத்துத்தரும் ஐயா அவர்கள் காலத்தில் வாழுகிறோம் என்று பெருமைகொள்ள முடிகிறது. சிவஞானபோதம், திருவாசகம், தமிழாகமம் ஆகிய திருமந்திரம் ஆகிய நூல்களுக்கு ஐயா அவர்கள் எழுதிய உரைகள் நுண்பெருக்கக் கண்ணாடியே போல நூலாசிரியர் கருத்துக்களை அரிதில் விளக்கிக் கற்போருக்குத் தெளிவுண்டாக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

கலப்படம் அருவெறுக்கத்தக்கது. நாடு முழுதும் மக்கள் கலப்படத்தை வெறுக்கவே செய்கிறார்கள். ஆனால் மொழி, தத்துவக் கலப்படத்தை யாரும் வன்மையாகக்


  1. “தமிழகம்” இதழ் 1-3-70