பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

219


இலக்கியம் ஐயா. ஆரவாரம், ஐயா அறியாத ஒன்று. பழக்கத்திற்கினிய நெஞ்சு! பண்புக்கோர் உறைவிடம்! செந்தமிழாயும் திறத்தினோர்க்கு ஓர் ஊன்றுகோல்! ஐயத்தைத் தெளிவிக்கும் அகன்ற புலமை! கழிவிரக்கம் ததும்பும் பேருள்ளம்! இன்னும் எவ்வளவோ பாராட்டலாம். சொற்களில்லை! பைந்தமிழ்ப் பயின்ற நம் நெஞ்சு, சுவைத்தது இரண்டு. ஒன்று தமிழ்: பிறிதொன்று ஐயா அவர்களின் உழுவலன்பு, இன்னும் பல நூறு பிறைகள் கண்டு இவர் வாழ்க! சாகாத தமிழும், இறப்பில் இறையும் இவர்தம் விழுமிய புலனுகர் திணை களாகும். ஆதலின் இறப்பு, இவரை அஞ்சுவதாக! சிவநெறியும் சீலமும் செந்தமிழின் தூய்மையும் நின்று நிலவ இவர் வாழ்க! நந்தம் தமிழுணர்வு தழைத்தினிது வாழ, வாழ்வாராக!