பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

229



கற்கும் கருத்துகள், சிந்தனைப் புலனில் தங்கி அறிவாக மாறி வளர்ந்து நமது வாழ்க்கையில் அமையாது போனால் கல்வியால் பயனில்லை; கேள்வியிலும் அப்படியே! நம்மைச் சுற்றியுள்ள உயிர்க்குலத்தை - உயிர்க்குலமல்லாதனவற்றை நாள்தோறும் ஆய்வு செய்தல் வேண்டும். இந்த ஆய்வுக்குத் தமிழ் வழிப் பயிலுதல் துணை செய்யும்; பொருளறிவும், பூத பெளதிக ஆய்வறிவும் செழித்து வளர்ந்தால்தான், வாழ்க்கை பொருள் பொதிந்ததாக அமையும். சிறந்த பொருளறிவு வாழ்க்கையை வளர்க்கும். எனைத்தானும் தமிழ் பயிலுக, தமிழ் வழிப் பயிலுக! சிந்தனையாளராகுக! அறிஞராகுக!

என்றும், தமிழ் பயிலுக! தமிழ் வளர்ந்த மொழி! பழுத்த மனத்தவர்கள் படைத்த பண்பாட்டிலக்கியங்கள் சிறந்த மொழி! அறநெறியில் மூத்த மொழி! பண்பாட்டில் வளர்ந்த மொழி! நயத்தக்க நாகரிகம் இதுவெனக் காட்டும் மொழி! வாழ்க்கைக்கு - இலக்கணம் கண்ட மொழி! சமன் செய்து சீர்தூக்கும் மொழி! வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் மொழி: தமிழே வாழ்வு! வாழ்வே தமிழ்! ஆதலால் தமிழ் பயிலுக! செழுந்தமிழ் வாழ்க்கையில் நின்று வாழ்க! தமிழே போல் வளர்க! தமிழே போல் நீதியொடு வாழ்க! தமிழே போல் தடையிலா ஞானத்தில் பொலிக! தமிழ் தழிஇய வாழ்வே வாழ்வு வளர்க! வாழ்க!

12.12.88

46. மொழி வழிச் சிந்தனைகள்
1. அறிவியலும் தமிழும்

ந்த நூற்றாண்டு விஞ்ஞான நூற்றாண்டு. விந்தை மிகு சாதனங்கள் பலப்பல நிகழும் காலம். விண்ணையும் வியன் மண்டலத்தையும் வலம்வந்து வாழும் காலம். உலகில் பல் மொழிகள் ஆங்கிலம், ஜெர்மன், உருசியா ஆகிய

கு.xiii.16.