பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழிகள் அறிவியல் துறையில் நாளும் வளர்ந்து வருகின்றன. பாரதியே,

'புத்தம் புதிய கலைகள்
மெத்த வளருது மேற்கே"

என்கிறார். இங்ஙனம் பிற நாடுகளில் விஞ்ஞானம் விண்ணை முட்டி வளரும் போது, தமிழில் அறிவியலைச் சொல்லிக் கொடுக்கலாமா, கூடாதா? என்ற ஆராய்ச்சியில் சிலர் இறங்கியிருக்கின்ற நிலை இரங்கத் தக்கது. சிலர் தமிழில் அறிவியல் வராது. ஆங்கிலமே அறிவயலுக்குரியதென் கிறார்கள். இவர்களைப் பாரதி "பேதை" என்று சாடுகிறார்.

இன்னமொழியில்தான் அறிவியல் வரும், அல்லது வளரும் என்று ஏதேனும் விதி உண்டா? சாத்திரமுண்டா? அல்லது கடவுள்தான் அப்படிச் செய்திருக்கிறாரா? எம் மொழிக்கும் உரியது அறிவியல். மொழி வழிப்பட்ட மக்களின் சிந்தனை முயற்சி இவற்றை ஒட்டித்தானே மொழி வளர்கிறது. கலை வளர்கிறது, அறிவியல் வளர்கிறது. அவ்வாறு இருக்கத் தமிழில் அறிவியல் வாராதென்று தமிழ் மீது பழியைச் சுமத்து வானேன்? உண்மையைச் சொன்னால், மற்றமொழிகளை விட அறிவியலை முறையாகச் சொல்லத் தமிழில் முடியும். அறிவியல் பருப்பொருளைப் பற்றியதேயாம். தமிழ், பண்டு தொட்டே நுணுக்கமான உயிரியல் கலைஞானத்தில் வளர்ந்து தத்துவ மொழியாகத் தழைத்தோங்கி வளர்வதை யாரே மறுக்க முடியும்? காணாப்பொருளைச் சொன்ன தமிழுக்குக் காணும் பொருளை ஆராய்தல் முடியாதா? நமது குறையை மொழியின் மீதேற்றுதல் மன்னிக்க முடியாதது.

அதுமட்டுமின்றித் தமிழில் பழங்காலந்தொட்டே அறிவியற் கருத்துக்கள் முகிழ்த்துக் கால்விட்டிருந்தும் அத்துறையில் நாம் தொடர்ந்து சிந்திக்காததாலேயே பின் தங்கிப் போனோம். அப்படிச் சிந்திக்காமற் போனதற்குக் காரணம், அறிவியல் வளர்ச்சி சமய அறிவுக்கு மாறுப்பட்டது என்று