பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


பொங்கல் சிந்தனையில் பொங்கல் நாளன்று “பழைய வீடு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. பழைய குப்பைகள் அகற்றப்பட்டுப் பழுது பார்த்துப் புதுவண்ணம் பூசிப் புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. அதைப் போல இதயத்தில் இடம் பெற்ற மாசுகள் அகற்றப்பட்டு நன்மைகள் எனும் புதுமைகள் சேர வேண்டும்.

'முன்னைப் பழமைக்கும் பழமையாய்
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியதாய்'

என்று சொன்னால் போதுமா? எப்பொழுது அதை நிறைவேற்றுவது?” என்ற சிந்தனையில் ஒன்றும் செயல்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றது

“சமூக நோக்கில் அறிவியல்” என்ற கட்டுரையில் நிலமகள் திருமேனியில் பசுமை ஆடை போர்த்தவேண்டும்; நிலமகள் முகத்தில் அழுக்குகளை, கழிவுப் பொருள்களை இட்டு அவளை அவலப்படுத்தாதீர்கள்! எல்லாக் கழிவுகளையும் சோம்பல் பாராமல் அவள் மடியில் வைத்துக் கட்டுங்கள்! அதாவது நிலத்தில் குழிவெட்டிக் கழிவுப் பொருள்களை அந்தக் குழியில் போட்டு மூடுங்கள் அவள் அவற்றை உரமாக்கிப் பொன்மதிப்பில் உங்களுக்குத் தந்து மகிழ்வாள்.” என்ற சிந்தனை மிகத் தேவையானது. 'தண்ணீர் பட்ட பாடு’ என்று பணத்தைத் தண்ணீரைப் போல் செலவழிக்கின்றார்கள் என்றும் கூறுவார்கள். இதுமிகத் தவறு. தண்ணீரைச் சேமித்துச் செலவழிக்கத் தெரியாததால் தான் கர்நாடகத்தோடு சண்டைபோட வேண்டிய நிலை! தண்ணீரை, காற்றைப் பற்றி விழிப்புணர்வு மிக்க கருத்துக்கள் இன்றையக் காலத்தில் அவசியமான கருத்துக்கள். ‘வாழ்க்கை நெறி - கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள்’ என்ற கட்டுரையில்

'இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்க: இதன் இயல்புணர்ந் தோரே'

என்ற கவிதைக்குத் தரப்படும் இந்த உலகம் துன்பம் நிறைந்ததுதான் துன்பத்தை விட்டு விட்டு இன்பத்தை மட்டும் உற்றுநோக்கு என்ற பழைய விளக்கத்தை மறுதலித்து விட்டு, ’துன்பம் நிறைந்த உலகத்தை இன்பமாக ஆக்கிக் காட்டு' என்று புதிய விளக்கத்தை அளித்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

‘உழைப்பின் பெருமையை, சிறப்பை இறைவனே போற்றினான்’ என்று கார்ல் மார்க்ஸ் சிந்தனையோடு நமது