பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

245


வந்த போது இந்தியையும், தமிழையும் படித்துக் கொண்டா வந்தார்கள்? எனவே, உலக உறவுக்குக்கூட ஆங்கிலம்தான் தேவை என்பது இல்லை.

பிறமொழிகளில் படிக்கும்போது எண்ணும்போது சிந்திக்கும்போது அவன் பழக்கத்தால் இயந்திரமாகவே மாறி விடுவான். டேப்ரிக்காடில் நாம் பேசிப் பதிவு செய்தால், நாம் பேசியதுதானே அதில் ஒலிபரப்பாகும்?

தாய் மொழிக் கல்விக்கு எண்ண சிந்திக்க வாய்ப்புண்டு; பிறமொழிக் கல்விக்கு அது இல்லை. தமிழ் பயிற்சி மொழியாக இருக்கும் கல்லூரிகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக நிற்கவேண்டும்; இது நமது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் போல. அதற்கு இளைஞர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். வேலை செய்கின்றவனுக்குத்தான் சோறு என்று மட்டும் இல்லாமல், சிந்தனையாளர்களுக்கு, அறிவியல் மேதைகளுக்கு அரசாங்கமே வீடு தேடிவந்து சோறு கொடுக்கின்ற நல்ல காலம் விரைவில் வரத்தான் போகிறது, எனவே தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

தமிழில் அருச்சனை செய்ய வேண்டும் - வழிபாட்டு மொழி தாய்மொழியாக இருத்தல் வேண்டும் என்று கூறிய போது, இப்போது தமிழ் பயிற்சி மொழியாவதற்கு ஏற்பட்டிருக்கிற எதிர்ப்பு போல இருக்கத்தான் செய்தது. நாம் நமது கோரிக்கையில் உறுதியாக நின்று அமைதியான முறையில் நமது கொள்கைகளை எடுத்து விளக்கினோம். இன்று தமிழில் அருச்சனை நடைபெறுகிறது. அது போல இப்போது தமிழ் பயிற்சி மொழியாக வேண்டும் என்ற நமது நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்க்கும் காலம் வரும். தாய்மொழி வழிச் சிந்தனையைத் தயவு செய்து தடைசெய்யவேண்டாம். அது வருங்காலச் சமுதாயத்தைப் பாழ்படுத்திவிடும் என்று

கு.xiii.17.