பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

251


விழிப்பாக இருந்து இந்திய தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டும். ஜனநாயக ரீதியில் நம்முடைய மொழி வழி உரிமைகளைப் பெற முயலவேண்டும்.

6. மறு பரிசீலனை தேவை

“இந்திய அரசின் தேர்வுகளை இந்தியில் எழுத 1965 விருந்து ஏற்பாடு செய்யப்பெறும் என்றும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாறுவதை நெடுநாட்களுக்குத் தள்ளிப் போடக் கூடாது என்றும் அதே காலத்தில் இந்தி பேசாத மாநில மக்கள் பாதிக்கப்பெறா வண்ணம் ஒரு பொது முறை நிர்ண யிக்கப் பெற வேண்டும்” என்றும் முதலமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப் பெற்றிருப்பதாகத் தெரிய வருகிறது. முடிவில் முதல் இரண்டில் இருக்கும் தெளிவும் உறுதியும் மூன்றாவதில் இல்லை என்பது வெளிப்படை இம்முடிவுகள் பொதுவாக நியாயமானவையாக இல்லை என்பதை நாம் வற்புறுத்த விரும்புகின்றோம்.

மொழி அறிவு வேறு - பொருளறிவு வேறு. திறமையின் அளவுகோல் பொருளறிவேயாகும். தாய்மொழியில்தான் பொருளறிவு சிந்தனையோடு பொருந்தியதாக - வளர்ச்சியின் கூறுகள் பொருந்தியதாக - தெளிவாக இருக்க முடியும். அதனால்தான் தாய்மொழி மூலம் கல்வி என்ற நியதி உலக அரங்கில் ஒத்துக் கொள்ளப் பெற்றிருக்கிறது.

இந்திய அரசின் தேர்வை இந்தியில் எழுதுவதானால் மொழி முட்டுப்பாடு முன் நின்று அல்லற்படுத்தும். மொழியின் காரணமாக திறமையும் பயனில்லாமல் போகிறது. இது நியாயமல்ல. இந்தி அலுவலக மொழியாயிருப்பது தவிர்க்க முடியாதது. அப்படியிருப்பதில் தவறில்லை என்பது நமக்கு உடன்பாடுதான். எனினும் அலுவலக மொழியாக இருக்கும் இந்தியில், ஒரு மொழி அறிவுத் தேர்வு எழுதப்பெற வேண்டும் என்று கூறினால்