பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



10. இந்திய ஆட்சிமொழி

பாரதநாடு மிகப் பெரிய நாடு. பல வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு. இந்நாட்டின் ஒருமைப்பாடே பாரதத்தின் பாதுகாப்பு. இந்திய ஒருமைப்பாட்டுக்கு இடையூறாக மொழி, சமய உண்ர்ச்சிகளைக் கைக்கொள்வது நன்மை தராது. இன்று பாரதநாட்டு மக்களிடையே மொழி உணர்ச்சி எங்கு கூடுதல் எங்கு குறை என்று சொல்ல முடியாத வண்ணம் பெருகி நிற்கிறது. இந்தி மொழி வெறியர் எப்படியும், யார் எதிர்த்தாலும், சட்டத்தின் துணைகொண்டு. இந்தியை அரியணையில் அமர்த்தி ஆட்சி மொழியாக்கி விடவேண்டும் என்றே கருதுகின்றார்கள். இந்தி பேசாத மாநில மக்கள் குறிப்பாகத் தமிழகம் - வங்கத்து மக்கள் இந்தியை எதிர்ப்பதொன்றே தங்கள் இலட்சியம் என்று கருதுகின்றார்கள். அவர்களுடைய இந்தி எதிர்ப்பு உணர்ச்சி தாய்மொழியின் மீது பற்றாகத் திருப்பிவிடப்படாமல் ஆங்கிலப்பற்றாக வளர்ந்திருப்பது, வருத்தத்திற்குரியதாகும்.

ஆட்சி மொழிக் கொள்கையைப் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாட்டில் எல்லோரும் மனநிறைவோடு ஏற்றுக் கொள்ளும்படி செய்வதன் மூலம்தான் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் வளர்க்க முடியும். அங்ஙனமின்றி சட்டத்தின் துணையுடனோ அல்லது பெரும்பான்மையோரின் முடிவு என்ற வாதத்தின் அடிப்படையிலோ ஒரு கொள்கை திணிக்கப்படுமானால் அந்த முறை நாட்டின் நல்வாழ்விற்கு உகந்தது அல்ல. பரிபூர்ண மக்களாட்சி முறைக்கும் ஏற்றமல்ல. இந்தியாவில் -இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கையைத் தனித்தனியே பிறமொழி பேசும் மக்களின் எண்ணிக்கையோடு தனியே ஒப்புநோக்கும் பொழுது இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகம் போலத் தோன்றினாலும் மொத்தத்தில் இந்தி பேசாத மக்களே அதிகம். எனினும்