பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

271


தமிழகம் கண்டிருக்க முடியும். உயிரினத்தை அறுவகையில் பிரித்துணர்ந்த தொல்காப்பியரின் உயிரியல் நுட்பம் அறிவியல் திட்டம் வாய்ந்ததுதானே! தமிழ் இன்று அறிவியலில் வளர்ந்துள்ள ஆங்கிலத்தை விட சிறந்தது என்பதே உண்மை. உலகப் பொது மொழியாதற்குரிய தனித்தகுதி தமிழிற்கு உண்டு. ஆனால் தமிழரிடை - ஒருமையின்மையாலும் இன மானம் காக்கும் பெரியார் நெறி நின்றொழுகாமையாலும் அவ்வாய்ப்பை இழந்துவிட்டனர். தொடர்ந்து சிந்தித்து வளரும் திறனை இழந்ததாலும், வாழ்க்கையைப் பிழைப்பாக்கிய அயல்மொழி, அயல்நெறி ஊடுருவலாலும் தமிழர் தமிழைத் தமிழ் நெறியைப் பேணி பாதுகாக்காமல் வறட்சித் தன்மையுடைய சமஸ்கிருதத்திற்கும் அடிமையாயினர். அதனால் தாய்மொழியில் திறம் இழந்தனர். இழந்தது போதாதா? அடைந்த அவலநிலை போதாதா? இந்தியாலும் நாம் மேலும் கெடவேண்டுமா? சுயமரியாதையைத் தன்னறிவை இழந்து இரண்டாந்தரக் குடிகளாக வேண்டுமா? அன்பர்களே! தமிழ்த் தொண்டர்களே! அன்பு கூர்ந்து எண்ணுங்கள்! உறங்கும் மனச்சான்றை உசுப்பி விட்டுக் கேளுங்கள்! தமிழ்ச் சான்றோரே! தமிழ்ப் பெரியிரே! தாங்கள் “மானம்" கருதாமல் ஒன்றுபட்டுத் தமிழகத்தை வழி நடத்தினால் வையகமே குலுங்க வரலாறு படைத்திடலாம். இன்பத் தமிழை வளர்ப்போம்! இந்தியின் ஆதிக்கத்தைத் தடை செய்து அன்னை மொழியை அரியணை ஏற்றுவோம்! இதுவே நமது பணி! என்ற முடிவை இம் மகாநாடு எடுக்கும் என்ற நம்பிக்கையில் இம் மகாநாட்டைத் தொடங்கி வைக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

பாரத நாடு

“பாரத நாடு இயற்கை அமைப்பில் ஒரு நாடன்று. பாரதம் ஒரு துணைக்கண்டம், ”இந்தியாவின் வேற்றுமைகள் மகத்தானவை. அது வெளிப்படையானதும் கூட அது