பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

273


ஆதலால் பாரதம் ஒரு நாடு என்ற கருத்து நிலையானது. பாரதம் ஒரு நாடு என்பதை என்றும் காப்பது நமது கடமை.

நாட்டு மொழிகள்

இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். பாரத நாட்டில் பேசப் பெறும் தாய் மொழிகளின் எண்ணிக்கை 1652. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நாட்டு மொழிகள் தேசிய மொழிகள் - National Languages) என்ற தகுதியினைப் பெற்றுள்ள மொழிகள் 14. இந்த நாட்டு மொழிகள் 14-ல் 360 தாய் மொழிகள் அடங்கியுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தில் நாட்டு மொழிகள் என்ற தகுதியைப் பெறாத மொழிகள் 17 உள்ளன. இந்த 17 பெருமொழிகளில் 24! தாய்மொழிகள் உள்ளன.

ஒவ்வொரு தாய்மொழியையும் சற்றேறக்குறைய 5 இலட்சம் மக்கள் பேசுகின்றனர். மேலும் ஒரு இலட்சம் முதல் அதற்கு மேலும் பேசக்கூடிய மக்களைக் கொண்ட மொழிகள் 19 உள்ளன. அவை தவிர ஆயிரக்கணக்கான மக்களால் பேசப் பெறும் தாய் மொழிகள் 857 உள்ளன. இங்ஙனம் தொகுக்கப்பெறும் கணக்கில் 1652 மொத்தத் தாய்மொழிகளும் 826 பெருமொழிகளும் உள்ளன. பல்வேறு மொழியினர் வாழும் ஒரு துணைக் கண்டத்தை எப்படி இந்தி என்ற ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும்? இந்தியால் ஒரு நாடு காண இயலாது.

இந்தி மொழியின் நிலை

இந்தி மொழியின் வரலாறு கி.பி.100-ல் தொடங்குகிறது. பிராகிருதத்தின் சிதைவிலிருந்து தோன்றி வடமொழிக் கலப்பினைப் பெற்று, கங்கைச் சமவெளியின் மேல்பாகத்திலும், டெல்லியைச் சுற்றிலும் பேச்சு வழக்கிலிருந்த “இந்தோ ஆரிய” மொழிக்கு ஐரோப்பியர் “இந்துஸ்தானி”, என்று