பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றெல்லாம் கணக்கெடுத்து ஆய்வு செய்தால் இந்தி பெரும்பான்மையோரால் பேசப்படுகிறது என்ற செய்தி உண்மையில்லை என்பதை அறியலாம்.

இந்த எண்ணிக்கையும் கூட எந்த இந்தியைத் தாய்மொழியாக உடையவர்கள் பேசக்கூடிய எண்ணிக்கை என்பது தெளிவில்லாதது. இந்தி மொழி பேசாத மக்கள் பாரத நாட்டு மக்கள் தொகையில் 73 விழுக்காட்டுக்குக் குறைவில்லை. இம் மக்கள் தொகுதியில் இலட்சக்கணக்கான மக்களும் கோடிக்கணக்கான மக்களும் பேசுகிற தாய் மொழிகள் உண்டு.

இவற்றில் தமிழும் வங்காளமும் குறிப்பிடத்தக்கன. இந்தி மொழியைப் பலர் பேசுகின்றனர் என்பதாலேயே அம்மொழி உயர்ந்ததாகி விடமுடியாது. இந்தியில் இலக்கிய வளம் இல்லை. விஞ்ஞானம், தொழில் நுட்பம், அரசியல் ஆகிய இன்றையத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய ஆற்றல் இந்திக்கு இம்மியும் இல்லை.

இத்துறையில் வங்காள மொழியும் தமிழ் மொழியும் வளர்ந்த மொழிகள். இந்தி மொழியை விடப் பல நூறு மடங்கு வளர்ந்துள்ள தமிழைப் பொதுமொழியாக்காது புறக்கணிப்பானேன்? ஆதலால் பாரதநாட்டின் ஒரு மொழியாக, நடுவணரசின் அலுவல் மொழியாக - தொடர்பு மொழியாக இந்தியை ஒப்பனை செய்து அத்தாணி மண்டபத்தில் ஏற்றுவது மனித நிலையின் படியும் நியாயம் இல்லை; மொழியின் அடிப்படையிலும் முழுக்க முழுக்கத் தவறு.

மனித உரிமையின் அடிப்படையிலும் நீதியன்று. நாட்டில் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்புடையதன்று. பாரத நாட்டின் ஒருமைப்பாட்டுணர்வை உருவாக்கும் செயலுமன்று. நாட்டின் அடிப்படையிலும் சரி, இன அடிப்படையிலும் சரி, மொழி அடிப்படையிலும் சரி, ஒரு தவறான