பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

277


கொள்கை - இந்தியே இந்த நாட்டின் அலுவல் மொழி என்பது.

இந்தியின் நிலை - அரசியல் சட்டம்

இந்தியா போன்ற பெரிய நாடு ஒரு மொழியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்வது நன்றன்று. இந்த இந்தி மொழி ஆதிக்க உணர்வு நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்; சுதந்திரத்திற்கு இழுக்குண்டாக்கி இழக்கச் செய்யும். இந்தி, நாட்டின் பொது மொழியாவதால் விளையும் தன்மையை விடத் தீமையே மிகுதி.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி பாரத தாட்டு ஆட்சி மொழி என்று இடம் பெற்ற வரலாறே இனிய வரலாறு அல்ல; கட்சிக் கட்டுப்பாடு, முகமன் காக்கும் நிலை ஆகியனவே இந்தியை அரியணை ஏற்றியது.

ஒருமனப்பாட்டுடன் இந்தி பாரத நாட்டின் ஆட்சி புரிமையைப் பெறவில்லை என்பதை அரசமைப்புக் குழுவின் வரலாறு நாடாளுமன்றம் ஆகியன எடுத்துக் கூறுகின்றன. இந்திய அரசியலமைப்புச் சபையிலேயே தென்னகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களால் கட்சிக் கட்டுபாட்டைக் கடத்தும் கூட அரசியல் அமைப்புக் குழுவின் நடவடிக்கை இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்பதை பற்றிய விவாதம் கடுமையாக நடைபெற்றிருக்கி விவாதத்தின் பொழுது "இந்தி ஆதரவாளர்கள், இந்தி தெரியாதவர்கள். இந்தியாவில் இருக்கத் தகுதியற்றவர்கள்" என்று கூறினர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. டி.டி. கிருஷ்ணமாச்சாரி அவர்கள் "இத்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்றால் தாட்டுப் பிரிவினை தவிர்க்க முடியாது” என்றார். அன்று கிருஷ்ணமாச்சாரி இந்தியை எதிர்த்துக் குரல் கொடுக்கப் இன்னணியாக அமைந்திருந்தது. தலைவர் தந்தை பெரியார்

கு.xiii.19