பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

281


ஏற்றுக் கொள்ள முடியாதவொன்று. அங்ஙனம் ஏற்றுக் கொள்ளும்படியாக வற்புறுத்தப் பெற்றால் தென்னகத்தில் ஒரு கசப்புணர்ச்சி தோன்றும்; நிலவும். அதன் விளைவுகளை இப்பொழுது யாரும் கற்பனை கூட்டச் செய்து பார்க்க முடியாது” என்று அன்று கோவை இராமலிங்க செட்டியார் சொன்ன எக்சரிக்கையையே நாம் இன்றும் எடுத்துக்காட்டுகின்றோம். அன்றும், இந்தி அன்பர்கள் அறியத் தவறி விட்டார்கள்; தொடர்ந்தும் உணர மறுக்கிறார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சி மொழிகள் இருப்பதை உலகத் தொடர்புடைய நாம் மறந்து விடுவானேன்? சுவிஸ் நாட்டில், ஜெர்மனி, பிரெஞ்சு, இத்தாலி ஆகிய மூன்று மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன, ஏன்? அந்த நாட்டின் மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டு மக்களே பேசும் 'ரோமஞ்சி' என்ற மொழியும் உரிமை பெற்றிருக்கிறது. அந்த நாட்டின் மக்களாட்சி மரபு எங்கே? 73 விழுக்காட்டு மக்களின் உரிமையை இழக்கச் செய்யும் நமது அரசின் மர எங்கே? கனடா நாட்டில் ஆங்கிலமும் பிரெஞ்சும் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. தென்னப்பிரிக்கா நாடு ஒற்றை ஆட்சி நாடு, அந்த நாட்டிலும் கூட டச்சும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. தென்னப்பிரிக்கா நாடு ஒற்றை ஆட்சி நாடு, அந்த நாட்டிலும் கூட டச்சும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ், சீனம், மலேசியம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக விளங்குகின்றன. ஆதலால், பாரதம் போன்ற ஒரு பெரிய நாட்டின் நாட்டு மொழிகள் என ஏற்றுக் கொள்ளப் பெற்ற அனைத்து நாட்டு மொழிகளும் ஆட்சி மொழிகளாவதே நியாயம், நீதி!

ஆங்கிலமும் நாட்டு மொழி

"ஆங்கிலோ - இந்தியர்"கள். இந்த நாட்டின் குடி மக்களேயாவர். அவர்களுடைய தாய்மொழி ஆங்கிலம்;