பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இதற்கா செவி சாய்க்கப் போகிறார்கள். 1965இல் இந்தி, பாரதத்தின் ஆட்சி மொழியாகச் சட்டபூர்வமாக இடம் பெற்றுவிட்டது. ஆங்கிலம் துணையாட்சி மொழி நிலைக்கு நகர்த்தப் பெற்றது. இந்த ஆட்சி பொழிச் சட்டத் திருத்தத்தை அறிஞர் அண்ணா அவர்கள் மீண்டும் எதிர்த்தார்கள். அறிஞர் அண்ணா மட்டுமல்ல -

அன்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களாகவும் நடுவணரசின் அமைச்சர்களாகவுமிருந்த திரு. சி. சுப்பிரமணியம், திரு. ஓ. வி. அளகேசன் ஆகியோர் நடுவணரசின் போக்கைக் கண்டித்து, நடுவணரசிலிருந்து வெளியேறினர். இந்த நிலையினைத் தொடர்ந்து இந்தி அரியணை ஏறும் 26-1-1965 ஆம் நாளுக்கு முதல் நாள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருந்த கிளர்ச்சி எல்லை கடந்தது.

மக்களின் கிளர்ச்சியை அரசின் அடக்குமுறைகள் அடக்கி விட முடியவில்லை. மழலை பேசும் சிறாரிலிருந்து மரணப் படுக்கையில் கிடந்த கிழவர் வரை இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இறுதியில் நடுவணரசு அமரர் நேருவின் உறுதிமொழியைச் சட்டபூர்வமாகச் செய்வதாக உறுதிமொழி தந்தது.

அந்த உறுதிமொழியைச் செயற்படுத்த 1968இல் தோன்றிய அரசியற் சட்டத் திருத்தத்தில் 1 -ஆவது சட்டத் திருத்தத்தில் அத் திருத்தத்தின் மூன்றாவது சட்ட விதி 5வது பகுப்பில், “இந்தியை மாநில ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளாத எல்லா மாநிலங்களும் தம் தம் சட்ட மன்றங் களில் அரசு காரியங்களுக்காக ஆங்கிலம் பயன்படுத்தத் தேவையில்லை” என்ற தீர்மானங்களை நிறைவேற்றி, அத்தீர் மானங்களை நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு சபையும் தனித் தனியாக ஏற்றுக் கொள்ளும் காலம் வரையிலும் ஆங்கிலமே பாரதத் துணைக் கண்டத்தின் இணையாட்சி