பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

289


மொழியாக இயங்கி வரும் என்று அறுதியிட்டுக் அறப் பட்டுள்ளது.

இந்த ஆட்சி மொழிச் சட்டத் திருத்தம், அமரர் அதிகச் அண்ணா அவர்களின் வெற்றி, அவர் தம் இயக்கத்தின் மகத்தான சாதனை! 1957 இல் தமிழ் நாட்டு மக்களிடத்தில் அமரர் அறிஞர் அண்ணா அவர்கள் பெற்ற வெற்றியே முடிவை எடுக்கும்படி நடுவனரசை நிர்ப்பந்தப் படுத்தியது.

அமரர் அறிஞர் அண்னா அவர்கள் பெற்ற வெற்றி பெரிதானாலும் வெற்றியின் பயன், நிலையானதல்ல. நாடாளுமன்றத்தின் சாதாரணச் சட்டத்தில் மூலம் தான் இந்த உறுதிமொழி கிடைத்தது. இந்த உதியொழி: பிறிதொரு நாடாளுமன்றச் சட்டம், வந்து நீக்ககூடும்.

ஆதலால், ஆட்சி மொழிச் சட்டம் 3-ஆம் பிரிவில் ஆம் பகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்தி பேசாதவர்களின் உரிமையை அசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெற வைத்தால்தான் நிலையான பாதுகாப்புக் கிடைக்கும்.

இந்தி கற்கக் கூடாதா? ஏன் கற்கக் கூடாது, கற்கலாம். எப்பொழுது தமிழுக்கு – தமிழர்க்கு எதிராக இந்த அமையாத நிலை ஏற்பட்டால் தான் கற்கலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தமிழ் ஆட்சிமொழி உரிமையைப் பெறட்டும்! அதற்குப் பிறகு நாம் இந்தியைக் கற்கலாம்.

இல்லையென்றால் இந்தி மொழியின் பேரபாயம்t ஒருபொழுதும் நீங்காது; என்றும் இருக்கும். நடுவணரசு நடத்தும் அனைத்திந்தியப் பணித் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப் பெறுவதில்லை. அதனால் இந்தி பேசாத மாநில மாணவர்கள் பின் தங்கிப் போகின்றார்.

அதுமட்டுமா, நீரில் நீந்தி விளையாடும் மீனைக் கரையில் இழுத்து உண்டு சீரணிக்க – தூண்டில் புழுவை மீனுக்குக் காட்டுவதுபோல – இந்தியைத் தாய்மொழியாகப் பெறாதார் இந்தியைப் பயல ஏராளமான சலுகைகள்;