பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தியை கற்பிப்பாருக்கு ஊதியங்கள்; இந்தியைக் கற்றுக் கொண்ட அலுவலர்களுக்கு சிறப்பூதியங்கள். இவைகளுக்கும் அப்பால் மறைமுகமான கட்டுப்பாடுகள் ஆகியன மூலம் நடைபெறுகின்றன. இது மறைமுகமான இந்தித் திணிப்பு என்பதை யார் மறுக்க முடியும்.

பாரதத்தின் மொழிச் சிக்கல் தீர்வுக்கு ஆலோசனையாக வைக்கப்பெற்ற மும்மொழித் திட்டமும், வடமாநிலங்களில் நடைமுறையில் இல்லை. அங்கு இந்தி, ஆங்கிலம் மட்டுமே கற்கப் பெறுகின்றன. மூன்றாவது மொழியாகிய இந்திய மொழி ஒன்றினை அவை விருப்பப் பாடமாக்கி ஒதுக்கி விட்டதால் வட மாநிலங்களில் மும்மொழித் திட்டம் நடைமுறையில் இல்லை. இதனை அறிந்து அமரர் அறிஞர் அண்ணா அவர்கள் 1968–ல் தமிழகத்திலும் இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் இந்தி மொழி இல்லை. அண்மைக் காலத்தில் மேற்கு வங்கமும் மும்மொழித் திட்டத்தைக் கைவிட்டு இருமொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. இது இந்தி எதிர்ப்பில் ஒரு திருப்பு மையம் என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை.

1968–ஆம் ஆண்டில் ஆட்சிமொழிச் சட்டத் திருத்தத்தினாலும் அமரர் அறிஞர் அண்ணா தமிழகத்தில் இருமொழிக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்தியை நீக்கியதினாலும் இந்தி நம்மைவிட்டு நீங்கியதென்று யாரும் மனப்பால் குடிக்கக் கூடாது. இந்தியினால் வரும் கேடு முற்றாக நீங்கியபாடில்லை. மேலும் ஆபத்து முறுகி வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்க 950 – ஆம் ஆண்டிலேயே இந்தியை அரசு மொழியாக ஏற்றுக் கொண்டு விட்டன. அந்த மாநிலங்கள் ஆங்கிலத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதனால் அந்த மாநிலங்களின் மாணவர்களுக்குத் தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பு வரை தாய்மொழி