பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழியாகக் கொண்ட மாணவர்களோடு மற்ற மாணவர்கள் போட்டி போட முடிவதில்லை. ஆதலால் இந்தி பேசாத மாதில மக்கள் உண்மையில் வளம்பெற வேண்டு மானால் பாரத நாட்டின் நாட்டு மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகளாவதைத் தவிர வேறு வழியில்லை.

இத்தி பேசும் மாநிலங்களுக்கு இந்தி தாய்மொழி. இந்தி பேசாத மாநில மக்களுக்கு ஆங்கிலம் தாய்மொழியன்று. அதனால் ஆங்கிலம் முதன்மைப்படுத்தப்படும் பொழுது அவர்களின் தாய்மொழி இரண்டாம் நிலையை அடைந்து விடுகிறது. இதனால் ஆங்கிலத்தை அகற்றி விடுவோம் என்ற அச்சம் வேண்டியதில்லை. அதுவும் ஒரு மொழிப் பாடமாக தொடர்ந்து பயிலப்பெறும், ஏன்? ஆங்கிலமே பாரதத்தின் உண்மையான தொடர்பு மொழியாக விளங்கும். ஆனால் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருந்திட வேண்டும். ஆட்சிமொழியாக அமைந்திட வேண்டும்.

தமிழகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் உண்மையான ஆட்சி மொழியாகத் தமிழ் அரியணை ஏற வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ஆங்கிலம் கைப்ப டிருக்கும் இடத்தைச் செந்தமிழ் பற்றிக் கொண்டேயாக வேண்டும். இந்த நிலை உருவாகத் தமிழும் இந்தியத் துணைக் கண்டத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இடம் பெற வேண்டும். அதுவே அமரர் அறிஞர் அண்ணாவின் கொள்கை.

இந்நிலை ஏற்படாவிடில் இந்தியை எதிர்க்கும் உணர்ச்சியில் இன்பத் தமிழை நோக்கி நகாமல் நாம் ஆங்கிலத்தை நோக்கியே நகரவேண்டிய இரங்கத்தக்க நிலை ஏற்பட்டு விடும். அப்போதும் இந்திக்காரர்களை நோக்க நாம் இரண்டாம்தரக் குடியினரேயாம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமன்று; இந்தி எதிர்ப்புப் போர்வையில்