பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
3
 
சமுதாயம்

47. கடவுளைப் போற்று!
மனிதனை நினை!

1. கடமை தாய் ! உரிமை சேய்!

நாடு களமாக இருக்க வேண்டும். "நாடென்ப நாடா வளத்தன” என்று திருக்குறள் கூறும். ஒரு நாடு இயற்கை வளமுடையதாக அமைந்திருந்தாலும் பொருள் வளமுடையதாக அமைந்துவிடாது. இயற்கை வளத்தில் அனைத்தும் பொருந்திய நாடு ஒன்றைக் காண்பது அரிது. மாறிக் கிடக்கும் வளங்களை மாற்றி வளம் காணும் நோக்குடையதுதான் உலக உறவு. நம்முடைய நாடேகூட அனைத்து வளங்களும் நிறைந்த நாடு என்றுதான் பெருமை பேசிக்கொள்கிறோம். இது இயற்கை மட்டுமல்ல. அவசியமும்கூட நாம் பிறந்த நாட்டை இனி நாம் மாற்றிக்கொள்ள முடியுமா? அல்லது மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா? பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகளில் குடியேறலாம், குடியேறி வாழமுடியும். அதற்கு