பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சாதாரண மக்களின் உழைப்பை உறிஞ்சுகின்றவர்களாகவே இருந்தனர். காலப் போக்கில் உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற கொள்கை நாகரிகம் வளர்ந்தது.

இன்று நமது நாட்டில் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறாத உழைப்பாளிகளும் உள்ளனர். ஊதியத்திற்கேற்ற உழைப்பைத் தராத உழைப்பாளிகளும் உள்ளனர். உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறாதவர்கள் கிராம மக்கள்! படிக்காதவர்கள்; சமுதாயத்தில் பின் தங்கியவர்க்ள். ஊதியத்திற்கேற்ற உழைப்பினை நல்காதவர்கள் படித்தவர்கள் – வசதி வாய்ப்பு உள்ளவர்கள். இந்த வகையினரின் நிலைமையே இன்று நம்மை வருத்துகின்ற துன்பம்.

இந்திய நாட்டில் இன்னமும் மக்கள் துறை என்று கூறப்பெறும் பொதுத்துறையும் கூட்டுத் துறையும், தொழில் திறனில் இலாபம் ஈட்டுவதில் வளரவில்லை. ஏன்? ஆனால் தனியார் துறை, தொழில் திறனில் வளர்ந்து வருகிறது. ஒரு தனிக் குடும்பத்தின் வருவாய் பலகோடி உயர்ந்து வளர்ந்துள்ளது. தனியார் துறையில் உள்ள கண்டிப்பும் கண்காணிப்பும் அக்கறையும் பொதுத்துறையில் இல்லை. கொஞ்சம் தலைகாட்டினால் உரிமை உணர்வின்பேரில் வேலை செய்யாமலிருக்கப் போராடுகின்றனர்! என்ன செய்ய? கூட்டுறவுத் துறையிலும் இந்திநிலைதான். கூட்டுறவுத் துறையில் வேலையின் தொடக்க நிலையில் இருக்கிற ஒரு சிற்றெழுத்தர்கூட நாளை எண்ணிச் சம்பளம் கேட்பாரே தவிர, உழைப்பைக் காட்டி அவர்தம் உழைப்பால் விளைந்த பயன்களைக் காட்டி உரிமையுடன் ஊதியம் கேட்க மாட்டார்; அதனால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ள பொதுத்துறை இழப்பைச் சந்தித்து ஏழ்மையை வளர்க்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் கேட்க இயலாத – உரிமை இல்லாத தனியார் துறை வளர்கிறது. அதனால் நாட்டு வருமானம் உயர்ந்தாலும் சராசரி மனிதனின் வருமானம் உயரவில்லை. ஏன்? உழைப்பால் வளரும்