பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

309



திருக்கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையவே கூடாது; மற்ற சமூகத்தினர் நுழையலாம்; இறைவனைத் தொட்டு வழிபட முடியாது. ஏன்? இறைவனுக்கு தீட்டு வந்து விடுமாம். நாடு விடுதலைப் போராட்டத்தில் ஈடபட்டிருந்த காலத்தில் இந்தத் தீண்டாமையை எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டாயத்தைச் சந்திக்க நேரிட்டது. இந்திய விடுதலைப் போராட்ட இயக்கமாகிய 'காங்கிரஸ்' தீண்டாமை விலக்குப் பணியையும் இலட்சியமாக ஏற்றுக் கொண்டு போராடியது. இதன் பயனாக நாடு விடுதலை பெற்றவுடன் ஆலய நுழைவுச் சட்டம் பிறந்தது. ஆண்டாண்டு காலமாகத் திருக்கோயிலுக்கு வெளியில் ஒதுங்கிப் படுத்துக் கிடந்த மக்கள் திருக்கோயிலுக்குள் வந்தனர். திருக்கோயிலின் எல்லா இடங்களுக்கும் அவர்கள் வர அனுமதிக்கப் பெறவில்லை. தடைகளுடன் கூடிய உரிமை தான் கிடைத்தது. நாடு விடுதலை பெற்றவுடன் எழுந்த பல்வேறு எழுச்சிகளில் இதுவும் ஒன்று; பாராட்டுதலுக்குரியதே.

அடுத்து இந்திய சமுதாயத்தினரின் அனைத்து மட்டங்களிலும் கற்கவேண்டும் - முன்னேற வேண்டும் என்ற உணர்வு கிளர்ந்து எழுந்தது. அமுக்கப்பட்டுக் கிடந்த அவர்கள் எழுந்து நடமாட முயன்றபோது தகுதி, திறமையின் பெயரால் அந்த நடமாட்டம் பயனற்றதாக்கப் பெற்று மீண்டும் கோடானுகோடி மக்களை முடக்கும் சூழ் நிலையையே வளர்ந்தவர்கள் உண்டாக்குகிறார்கள். அப்படியானால் தகுதி திறமை வேண்டாமா? யார் சொன்னது வேண்டாம் என்று. தகுதியும் திறமையும் பெறுவது செயற்பாட்டினால் தானே ஒழிய வேறு அல்ல. அவர்கள் தகுதியை - திறமையைப் பெற முதலில் கற்கவும், வேலைகளைச் செய்யவும் உரிமை பெற்றதால்தானே தகுதியை திறமையைப் பெறமுடியும். இந்த எண்ணச் சூழலில்தான் கல்விக் கூடங்களில் அரசுப் பணிகளில் தேர்தல் தொகுதிகளில் தாழ்த்தப்

கு.xiii.21.