பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
1
நாடு
1. [1]இந்தியா

ந்தியா ஒரு துணைக்கண்டம்; பெரிய நாடு. இந்திய நாட்டை ஒரு நாடாக ஆக்கி ஆட்சி செய்ய விரும்பிய இந்திய அரசர்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி முதன் முதலாக இந்தியாவை ஒரு நாடாக ஆக்கி ஆண்டது. ஆங்கிலேயராட்சி அகன்று சுதந்திரம் வந்த பொழுதுகூட பாரதி கூறியதுபோல “சேதமில்லாத இந்துஸ்தானம்” நமக்குக் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் நாட்டைத் தூண்டிவிட்டனர். எஞ்சிய இந்தியப் பகுதி இந்தியாவாக இருந்துவருகிறது.

இந்தியா ஒரு நாடாக இருக்கவேண்டும். இந்திய ஒருமைப்பாடு இந்திய மக்களின் ஒழுக்கமாக வளர்ந்து உறுதி பெற வேண்டும். மொழி, இன, சமய வழி உணர்வுகள் இந்திய ஒருமைப்பாட்டுக்குத் தடையாக இருக்கக்கூடாது. மாறாக இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கக்கூடியதாக அமைதல்
  1. கடவுளைப் போற்று! மனிதனை நினை