பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ள வேண்டும் என்பது. சமூக ஒதுக்கல் கொள்கைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் கல்வியில் பின்தங்கியவர்கள், வேலை வாய்ப்பில் பின்தங்கியவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இத்தனை வகையிலும் பின்தங்கியவர்கள் அனைவரும் உதவிக்கு முழுதும் உரியவர்கள். இவர்கள் இன்றுள்ள தாழ்த்தப்பட்டோர் போல முதற் சலுகைக்கு உரியவர்கள். அடுத்து, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மிகவும் பிற்பட்டோர்கள் அடுத்து ஏதாவது இரண்டில் பின்பற்றியவர்களாக இருந்தால் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர்கள். இந்த முறை நடைமுறைப்படுத்தப் பெற்றால் சாதி வேற்றுமைகள் நீங்கும். இதுபோலவே நமது சமயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிற சாதி முறைகளை அறவே அகற்ற வேண்டும்.

–‘மக்கள் சிந்தனை’ 15–6–81


7. வளர்ந்துவரும் சமுதாயத்தில்
பிற்படுத்தப்பட்டோர் யார்?
தாழ்த்தப்பட்டோர் யார்?


சமுதாயம் என்பது ஒருவர் பலருக்காகவும் பலர் ஒருவருக்காகவும் என்ற கொள்கை வழி உருக்கொள்ளும் அமைப்பாகும். இக் கொள்கை வழி அமைந்த சமுதாய அமைப்பில் இன, சமய, சாதி, குல, கோத்திர வேற்றுமைகள் இருக்க நியாயமில்லை; இருக்கக்கூடாது என்பது திருக்குறள் நெறி. பிறப்பிலேயே சாதி வேற்றுமைகளையும், சிறப்புத் தகுதிகளையும் இழிவுகளையும் படைத்துத் தந்த பிற்போக்கு வழக்கை மறுக்கிறது பொதுமறை திருக்குறள், சாதி வேற்றுமை, இன வேற்றுமை, நிற வேற்றுமை அவ்வழி ஒதுக்கல் ஆகிய அனைத்துச் சமுதாயத் தீமைகளையும் முற்றாக மறுக்கிறது. "எல்லா உயிர்களும் பிறப்பில் ஒத்த