பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

321


தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு திருக்குறள் பேரவையினரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

விளக்கம்

சமுதாயத்தின் பிரிவுகள் மூன்று

1.தாழ்த்தப்பட்டவர்கள் - சமுதாயத்தில் அங்கீகரிக்கப் பெறாது ஒதுக்கப்பட்டவர்கள் - ஒதுங்கி வாழ்பவர்கள்.

2.மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்.

3.பிற்படுத்தப்பட்டவர்கள்.

ஒருவகையிலும் பின்தங்கிய நிலையில் இல்லாதவர்கள் வளர்ந்த சமுதாயத்தினர் - இவர்கள் தகுதி திறமையின் காரணமாகவே பொது இடங்களில் வெற்றி பெற்று வர வேண்டும். இவர்கள் மற்றவர்களுக்குரிய சலுகைகளைக் கேட்பதைத் தவிர்த்து அவர்களைச் சமநிலைக்குக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இம் மூவகைப் பிரிவினரும் சலுகைகள் பெறுவதற்குரிய பிரிவினர். இப்பிரிவுகளின் வரிசைப்படியே முன்னுரிமைகள் வழங்கப்பெறுதல் வேண்டும். இம்மூன்றிலும் அடங்காத வர்கள் வளர்ந்த சமுதாயத்தினர் என்று கருதப்பெறுவது நியாயத்தின் பாற்பட்ட உண்மையே.

இந்தப் பிரிவுகள் இன்று நடைமுறையில் உள்ள பிரிவுகள் அல்ல, ஆதலால் இன்றுள்ள சாதிமுறைப் பிரிவுகளை மறந்துவிடுக. இப்புதிய பிரிவுகள் இன்றுள்ள சமூகங்களின் உண்மையான நிலைமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தற்காலிகமாகப் பிரிக்கப்பெறும் பிரிவுகள். இப்பிரிவுகள் நிலையானவையல்ல. காலப் போக்கில் வளர்ச்சியின் காரணமாக இப்பிரிவுகளுக்கிடையில் மாற்றங்கள் ஏற்படும். அதாவது ஒரு பிரிவு பிறிதொரு