பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிரிவுக்கு மாறும் காலப் போக்கில் பிரிவுகளே இல்லாத சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயம் தோன்றும். அப்போது இப்பிரிவுகள் இரா. இப் பிரிவுகளே இல்லாத சமுதாயத்தை அமைப்பதில் தொடக்கமே இந்த முயற்சி

1.தாழ்த்தப்பட்டவர்கள்:

சமூகத்தில் தீண்டாமையால் ஒதுக்கப்பட்டிருப்பவர்கள் (இப்போதும் தீண்டாமை அவதி நடைமுறையில் இருந்தால்)

2.கல்வியில் பின் தங்கியவர்கள்:

ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறைகள் தொடர்ச்சியாக (மூவர்) பட்டப் படிப்புப் பெற்றவர்கள் இருந்தால் அல்லது மூவர் பட்டப் படிப்புப் பெறும்வரை.

3.பொருளாதாரத் தகுதி:

ஸ்டாண்டர்டு ஏக்கர் 10க்குமேல் சொந்தமாக உடையவர்கள், அல்லது குடும்ப வருமானம் (கணவன்-மனைவி இருவர் வருமானம்) ரூ. 15000க்கு மேல் உள்ளவர்கள்.

1.இம்மூன்று நிலைகளிலும் மூன்றிலும் பின் தங்கியிருப்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்.

2.கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியிருப்பவர்கள் - மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்.

3.கல்வியில் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்கள் - பிற்படுத்தப்பட்டவர்கள்.

இந்தப் பிரிவுகளில் மூன்றிலும் பின்தங்கியவர்களுக்குக் கல்வியில் இடஒதுக்கீடு, மதிப்பெண்களில் சலுகை, உதவித் தொகை ஆகிய அனைத்தும் வழங்கப்பெறுதல் வேண்டும். மதிப்பெண்களில் சலுகை வழங்காமல் இவர்கள் தகுதியைப்