பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

333


மாதிரியான சமூகத் தீயசக்திகள் பல சமயங்களில் அரசுகளாலேயே அங்கீகரிக்கப்பெற்று வலிமை பெற்றும் வருகின்றன. இந்த அடிப்படையில்தான் பஞ்சாப் பிரச்சனை உருவாகியது. சமூகத் தீயசக்திகள் சாதீய அமைப்புகள், மத வெறுப்பு இயக்கங்கள் ஆகியன இன்று கெட்டிப்பட்டுள்ள நிறுவன அமைப்புக்களாகிப் பிழைப்புச் சாதனங்களாகவும் வளர்கின்றன. இந்த நடைமுறை இந்தியாவை – இந்திய சமுதாயத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். நமது மக்கள் உணரவேண்டும்; நமது அரசுகள் உணர வேண்டும்.

நாட்டு மக்களிடத்தில் குழு மனப்பான்மைகள், சாதி, மதப் பிரிவினைகள் இவற்றை அகற்றும் பயிற்சியைத் தந்து, ஒரு சமூகமாகக் கூட்டுறவில் – கூட்டுணர்வில் வாழப் பழக்கி ஆற்றுப்படுத்துதல் வேண்டும். நாட்டு மக்களை வருத்தும் வறுமையிலிருந்து மீட்க, வேலை வாய்ப்புக்களைக் கூட்டுறவு நெறியில் காணவும் ஒரு கூட்டுடைமைச் சமுதாயத்தைக் காணவும் அரசியல் கட்சிகளின் சார்பற்ற மக்கள் இயக்கம் உண்டாகவேண்டும். இந்த இயக்கம் போர்க்கால அடிப் படையில் பணி செய்தல் வேண்டும். சமயச் சார்பற்ற தன்மை இந்திய மக்களின் பழக்கமாக, வழக்கமாக உருக்கொள்ளுதல் வேண்டும். இந்தக் கருத்தரங்கின் நிகழ்வுப் போக்கில் கிடைத்த எண்ணங்கள் – எண்ணங்களின் தொகுப்பு இவையே!

என்றுமே நமது தத்துவங்களில் வறுமை இருந்ததில்லை. ஆனால் செயலில்தான் வறுமை. இந்தச் செயலற்ற தன்மையிலிருந்து – இந்திய சமூக ஊழியர்கள், அறிவு ஜீவிகள் – நீங்கி ஊக்கத்துடன் உழைத்தால் நமது நாட்டின் சிக்கல்கள் எளிதில் தீரும். 2001இல் புதிய இந்தியாவை – ஒரே இந்தியாவை–ஒரே கடவுளை வழிபடும் இந்தியாவைக் காண இயலும். இந்திய இளைஞர்களின் – உழைப்பவர்களின் கதைகள், உழைப்பு ரீங்காரம் செய்யும் இந்தியாவைக்