பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

19


அல்ல என்ற வரலாற்று நியதியை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வகையில் பல மொழிவழி இனங்களைக் கொண்ட சோவியத் ஒன்றியம் முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. மாநிலங்கள் பூரண ஆட்சியுரிமையும் தகுதியும் உடையவனவாக இருக்கவேண்டும். மாநிலங்கள் தன்னாட்சி பெற்ற சிறந்த குடியரசுகளாக விளங்குதல் வேண்டும். மாநிலங்கள் பஞ்சாயத்துக்கள் போல நடத்தப் பெறுதல் கூடாது. அதிகார வரம்புகளால் உருவாக்கப்பெறும் ஒருமைப்பாடு இந்தியாவை ஒன்றாக்கி விடாது. இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களும் பூரண உரிமைகள் பெற்றவைகளாக இந்திய ஒன்றியத்தில் இணைந்து வலிமைபெற வேண்டும். மாநிலப் பிரச்சனைகளில் மைய அரசு வழிகாட்டுதலும் வழி நடத்துதலும் இருக்கலாம்; தலையீடுகள் இருத்தல் கூடாது.

இந்தியாவின் மாநில மொழிகள் உடனடியாக அனைத்துத் துறைகளிலும் உரிமை பெற்ற மொழிகளாக இடம் பெறுதல் வேண்டும். பயிற்றுமொழியாகவும் ஆட்சி மொழியாகவும் தாய்மொழியே இடம் பெறுதல் வேண்டும். இந்த இடங்களில் உள்ள தாய் மொழியல்லாத மொழியை உடனடியாக அகற்றுதல் அறிவு வளர்ச்சிக்கும்-சுதந்திர உணர்வுக்கும் துணை செய்யும். இந்தியாவின் தொடர்பு மொழியாக இந்தியும் மைய அரசின் ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கட்டும். இந்திய மக்கள் அனைவரும் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை மொழிப்பாடமாக கட்டாயம் படித்தல் வேண்டும். இது இந்திய ஒருமைப் பாட்டிற்கும் உலக உறவுகளுக்கும் தேவை, மூன்றாவது மொழியாக விருப்பப் பாடமாக இந்தியை இந்திய மாணவர்கள் அனைவரும் படித்தல் வேண்டும். மாநிலங்களில் தாய்மொழிகளின் நிலையும் மைய அரசில் இந்தி-ஆங்கிலம் என்கிற இருமொழி ஆட்சி நிலையும் அரசியல் சட்டரீதியாக உறுதிப்படுத்தப் பெற்றுவிட்டால் இந்தியை விருப்பப்பாடமாக