பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



விழிப்புணர்வு வேண்டும்

இத்தகு அவலங்கள் தொடர்ச்சியாக நிகழ்வதற்குக் காரணம், கிராம மக்களிடத்தில் போதிய அறிவும் விழிப்புணர்வும் இன்மையேயாகும். மூட நம்பிக்கை, விதிக் கொள்கை, சோதிடம் ஆகியவற்றால் கிராம மக்களின் அறிவுநிலை மிகவும் பாதிக்கப்பெற்றுள்ளது. இந்த கிராம சமூகத்தை, அறிவும் தெளிவும், விழிப்புணர்வும் உரிமை யுணர்வும் உடையதாக மாற்றி வளர்த்தால்தான் கிராம சமுதாயம் அரசியல், பொருளாதார விடுதலையை முழுமையாப் பெறும். இஃது ஒரு தலையான கருத்து.

வேளாண்மை:

கிராமப்புற வறுமை ஆழமானது; புரையோடிப் போனது. ஆனாலும் மனச் சான்றுடன் உழைத்தால் சில ஆண்டுகளிலேயே மாற்றம் காணலாம். கிராம சமூகத்தின் பொருளாதரத்தை, அரசும் வன்கடனாளர்களும் சுரண்டாமல் இருந்தாலேயே கிராமங்கள் காப்பாற்றப்பட்டு விடும். மக்களின் உடைமையாகிய நிலவுடைமை. அவரவர் உடைமை உரிமைகளுக்கு ஊறு இல்லாமல் அதே போழ்தில் உற்பத்தி, பராமரிப்பு முதலிய பணிகளின் அளவில் கிராம சமுதாயத்தினுடையதாகவும் கருதுதல் வேண்டும். நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராயின; துருப் பிடித்த இரும்பு போலாயின. நிலச்சீர்திருத்தச் சட்டங்களைக் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். நிலம், கிராம சமுதாய உடைமை. நிலம் விற்கப்படுவிதும் வாங்கப்படுவதும் உடனடியாகத் தடை செய்யப்படவேண்டும். நிலங்கள் துண்டாடப்படுதலைத் தவிர்க்க வேண்டும். அகண்ட கூட்டுறவுப் பண்ணைகள் அமைவதுதான் கட்டுபடியான விவாசயத்திற்கு உதவியாக இருக்கும். நிலத்தினுடைய உற்பத்தித் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதாவது - ஒரு ஹெக்டேருக்கு 30 டன் உற்பத்தி செய்யலாம் என்பது அறிவியலாளர்கள் கூறும் செய்தி. நாம் விளைவிப்பதோ