பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

341


3 டன்தான்! எவ்வளவு இடைவெளி இயற்கை அளிக்கும் செல்வம் இவ்வளவு வீண்படுதலுக்கு என்ன நியாயம் கூற முடியும்? அதனால்தான்.

"இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்”

- குறள் 1040

என்றார் திருவள்ளுவர்.

ஆதலால், கிராமப்புற மேம்பாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை தந்து கவனிக்கப் பெறுதல் வேண்டும்.

இத்துறையில் கடந்த காலத்தில் நிறையச் செய்யப் பெற்றுள்ளன. அவை அளவில் கூடுதலாயினும் உரிய இடங்களுக்குப் போய்ச் சேரவில்லை; போதிய பயனும் விளையவில்லை.

செய்ய வேண்டியன:

கிராமப்புற மேம்பாட்டில் விவசாயத் தொடர்பாகச் செய்ய வேண்டியவை யாவை?

1 கிராமத்தின் நிலம் முழுவதையும் கிராமத்தின் உடைமை என்றே கருதவேண்டும். ஆதலால், ஊராட்சி மன்றத்தின் கவனத்திற்கு வராமல் நிலம் விற்கப்படுதல் பராதீனம் செய்யப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

2. கிராமத்தில் உள்ள சிறு விவசாயியின் நிலத்தை, நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களும் பெருந்தனக் காரர்களும் வாங்குவது முற்றாகத் தடை செய்யப்பெறுதல் வேண்டும்.

3. கிராமத்தில் நிலங்களை ஒருங்கிணைத்துக் கூட்டுறவுப் பண்ணையாக நடத்துதல் மிகவும் நன்று. இங்ஙனம் செய்தால் தரமான உயர் அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்துடன் சாகுபடி செய்யலாம். விளைச்சலும் பெருகும்;

கு.xiii.23.