பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

343


பயிர்ச் சாகுபடி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது கிராமத்திற்குத் தேவையான நெல், பருப்பு வகை, எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழ வகைகள், மிளகாய், பருத்தி, கால்நடைத் தீவனம் முதலியனவற்றைச் சாகுபடி செய்து கிராமத்தைத் தன்னிறைவுடையதாக ஆக்கும் விவசாய முறை நடைமுறைக்கு வந்தாக வேண்டும். கிராமம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு வகைப் பொருளிலும் 20 சதவீதம் நாட்டுத் தேவைக்காக அரசுக்கோ நுகர்பொருள் வாணிகக் கழகக் கூட்டுறவு நிறுவனத்துக்கோ விற்க வேண்டும். அரசு தனக்குத் தேவையான தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கு என்று தனியே ஒரு நிறுவனம் அவசியமில்லை. நுகர் பொருள் வாணிகக் கழகம் நேரிடையாகக் கூட்டுறவு விவசாய சேவைச் சங்கத்திலேயே வாங்கிக் கொள்ளலாம். கிராமத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் நல்ல விலையில் விற்க விவசாய சேவைக் கூட்டுறவு சங்கங்கள் முன் வர வேண்டும். மேலும் நிலப்பரப்பு இருந்தால், தொழிலுக்கு ஆகக்கூடிய ஆமணக்கு, பப்பாளி மரவள்ளிக்கிழங்கு முதலியன சாகுபடி செய்து, வேளாண்மை அடிப்படையிலான தொழில்களை உருவாக்க வேண்டும். இதனால் விவாசயிக்கும் வருவாய் பெருகும்; வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

7. இன்று விவசாயத் துறையைக் கிராம அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்துத் தக்கமுறையில் வழி நடத்திப் பொறுப்பேற்றுச் செய்யும் ஒரு நிர்வாக அமைப்பு அமையாதது ஒரு குறையே. இந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கூட்டுறவு