பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விவாசய நாணயச் சங்கம் தோன்றியது. அது விவசாயப் பணிகளை ஒருங்கிணைந்த நிலையில் செய்யவில்லை. பயிர்க் கடன் கொடுத்தது; உரம் வாங்கி விற்பனை செய்தது; செய்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டுறவு விவசாய நாணயச் சங்கம் பின், கூட்டுறவு விவாசய சேவைச் சங்கமாக மாறியது. பெயர்தான் மாறியது. சேவை கிடைக்கவில்லை. பின் சேவையை மறந்து விட்டுத் தொடக்கக் கூட்டுறவு வங்கியாக மாறி இன்று அஃதொரு அப்பட்டமான லேவாதேவி நிறுவனமாக, தங்க நகைக்குக் கடன் வழங்குவதை உயர் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது. தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப் பெற்றுள்ள தங்க நகைக் கடன்களே சொல்லும். கிராமத்தின் செல்வம் சீரழிவதை கிராமத்தின் கடன்களே மிகுகின்றன. கிராமத்தில் சேமித்த, தோடு மூக்குத்திகள் எல்லாம் பறிபோகின்றன. இந்த நிலைமை முற்றாக மாற்றப்படுதல் வேண்டும். மீண்டும் கிராமத் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் விவசாய சேவைச் சங்கங்களாக வேலை செய்ய வேண்டும். விவசாயத் தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்த முறையில் மண்பரிசோதனை. விதை, உரம் விற்பனை விவசாயக் கருவிகள் வாடகைக்குத் தருதல், நீர்ப்பாசனம், விவசாய அறிவு வளர்த்தல், உற்பத்தி செய்த பொருள்கள் விற்பனை ஆகியன் இந்த விவசாயக் கூட்டுறவு சேவைச் சங்கத்தின் மூலமே நடைபெற வேண்டும். இந்த விவசாயக் கூட்டுறவு சேவைச் சங்கத்தின் நிதி ஆதாரங்கள் பலப்படுத்தப் பெறுதல் வேண்டும். அரசு, இந்த விவசாய சேவைச் சங்கத்தின் பணித் திட்டங்