பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

347


நேரடியாகவும் ஒப்பந்தம் மூலமாகவும் செய்ய முன்வரவேண்டும். இன்று கலவை உரம் தயாரிக்கும் முயற்சியே இல்லை. தூண்டு சக்தியாக விளங்கும் இரசாயன உரங்களையே விவசாயிகள் உரங்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக இரசாயன உரங்கள் உபயோகிப்பதால் நிலங்கள் நிலவளத்தை இழந்து கொண்டு வருகின்றன. இதை உடனடியாகத் தடுத்துக் கலவை உரங்கள் தயாரிக்கவும் உரச் செடிகளை வளர்க்கவும் வேண்டும். இந்தப் பொறுப்பை விவசாயக் கூட்டுறவு சேவைச் சங்கம் ஏற்கவேண்டும்.

11. விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை அவரவர் தேவைக்கு வைத்து உபயோகப்படுத்திக் கொள்ளவும் கிராமத் தேவைக்கு (உற்பத்தியாளர் அல்லாதவர் உபயோகத்துக்கு) என்று 30 சதவீதம் கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு விற்பனைக்கு வழங்கவும் விவசாய சேவைச் சங்கம் முன்வர வேண்டும்.

12. விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களின் கிராமத்தின் தேவைபோக எஞ்சியவைகளை விவாசய சேவைச் சங்கங்களே வாங்கி நல்ல விலைக்குக் கொடுக்கவும் இலாப நோக்கத்துடன் அல்ல); ஒருபகுதி கிராமத்தின் தேவைப் பெருட்களை - விளையாதவற்றைப் பண்டமாற்று முறையில் வாங்கி வைத்துக் கொடுக்கவும் விவசாயக் கூட்டுறவு சேவைச் சங்கங்கள் பணி செய்ய வேண்டும்.

13. பொதுவாக கிராமத்தில் பசுமைப் புரட்சிக்கு விவசாயிகளுக்கு உறுதணையாக அமையும்