பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பல்வகைப் பணிநிறுவனமாக இந்தக் கூட்டுறவு விவசாய சேவைச் சங்கம் இயங்க வேண்டும்.

14. இந்தச் சங்கம் விவசாயிகளிடம் சேமிப்பு முறைகளை ஊக்குவித்து இட்டு வைப்புகளைப் பெற வேண்டும்.

15. விவசாய சேவைச் சங்க உறுப்பினர்களுக்குப் பனமிழப்பில்லாத ஏலச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தி நடைமுறைச் செலவுகளுக்கு உதவி செய்வதுடன் தனது நிதி ஆதாரத்தையும் பெருக்கிக் கொள்ளலாம்.

16. விவசாயத் தொழிலுக்கு அரசு உரமான்யம் முதலியன வழங்கப்படுவதற்குப் பதிலாக அடிப்படை உற்பத்தி அளவிலிருந்து கூடுதல் உற்பத்தி செய்கிற விவசாயிகளுக்குக் கூடுதல் நெல் ஒவ்வொரு குவிண்டாலுக்கும் உற்பத்தி ஊக்க ஊதியம் (Bonus) தருவது நல்லது. இந்த முறை ஜப்பானில் இருக்கிறது.

மரம் வளர்ப்பு

கிராமப்புற மேம்பாட்டுக்குப் பலவகையிலும் உதவி செய்யக்கூடியது காடு வளர்ப்பு ஆகும். நல்ல மழை பொழிய வேளாண்மைக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்க கிராமப்புறத் தட்ப வெப்ப நிலைகளைச் சீராகப் பராமரிக்கக் காடுகள் தேவை. அறிவியற் பார்வையின் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1/3-ல் பங்கு காடுகள் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இந்தியாவில் இருக்கும் காடு 18 சதவீதம்தான். அதில் தமிழ்நாட்டில் இருப்பது 16 சதவீதம்தான். கிராமப்புறங்கள் அடர்த்தியான காடுகளால், மரங்களால் அணிசெய்யப்பெற்று விளங்கவேண்டும். “வீட்டுக்கு ஒரு மரம்” என்பது இன்றைய நிலையில் போதாது.