பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாடுகள் வாங்க வழங்கிய கடன்களின் மீது 40 சதவிகிதம் கால்நடைச் சொத்துக்கள் உருவாகவுமில்லை; உருவான 40 சதவிகிதம் தரமானவையுமல்ல. அவை நாட்பட வாழ்ந்து போட்ட முதலுக்கு ஏற்ற பயன் தரக் கூடியவை அல்ல. இந்த முறைகேடுகளைத் தவிர்க்க அடியிற் கண்ட முறைகள் பயன்படும்.

தரமான பால் மாடுகளை - ஆடுகளை இன்று வாங்க முடியவில்லை. விவசாயிகளுக்கு நேரிடையாகப் பணம் தருவதால்தான் இலஞ்சம் மற்றும் பல வழிகளில் பணம் பாழாகிறது. ஆதலால் ஒவ்வொரு மவாட்டத்திற்கும் தரமான கால்நடைகளை வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கக் கூட்டுறவு முறையில் கன்று வளர்ப்புப் பண்ணைகளை அமைக்க வேண்டும். பால் மாட்டுக்கடன், ஆட்டுக் கடன் அனுமதி பெற்றவர்கள் இந்தப் பண்ணைகளுக்குப் போய் மூன்று நாள்கள் தங்கித் தங்களுக்குப் பிடித்தமான மாடுகளை ஆடுகளை நன்றாகச் சோதித்து வாங்கிக் கொள்ளலாம்; பணம் பரிமாற்றம் வாங்குபவர் பெயரால் கூட்டுறவு நிறுவனங்களுக்கிடையே நிகழ வேண்டும். இம்முறையால் கால்நடைத் துறையில் நடைபெறக் கூடிய தவறுகள் தவிர்க்கப் பெறும். விரைந்த வளர்ச்சியும் காணப்பெறும். இப்போது ஒசூர், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, செட்டி நாடு ஆகிய ஊர்களில் இருக்கும் கால்நடைப் பண்ணைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தப் பணித் திட்டம் அந்தப் பண்ணைகளில் இல்லை. இந்தப் பண்ணைகள் ஆராய்ச்சி மையங்களைப் போலவே இயங்குகின்றன. கிராமப் புறங்களில் அமையும் கால்நடை மருத்துவ நிலையங்கள் சிறந்த முறையில் அமைந்து பணி செய்ய வேண்டும். கால்நடை மருத்துவருக்கும் ஊழியர்களுக்கும் மருத்துவமனையின் பக்கத்திலேயே வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். அவர்கள் எப்போதும் கிராமத்திலேயே தங்கிப் பணி செய்ய வேண்டும். கால்நடை மருத்துவமனைகளுக்குத் தொலைபேசி இணைப்புகள், ஊர்திகள் குளிர்சாதனப் பெட்டிகள்