பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

353


முதலிய வசதிகள் செய்து தரப்பெறுதல் வேண்டும். கால் நடைத் துறை மூலமே கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு முதலியவற்றையும் ஊக்குவித்துக் கிராமப்புற விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வேண்டும். பால் மாடுகளின் தரத்தைக் கூட்டி, நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் வரை பால் கறக்கும்படி செய்தால்தான் பால்மாடு வளர்ப்பு கட்டுப்படியான வாழ்க்கைத் தொழிலாக அமைய முடியும். செம்மறி ஆடுகளை முறையாக வளர்த்தால் 8 மாதத்திற்கு ஒன்று வீதம் 16 மாதத்திற்கு 2 குட்டிகள் போடும். ஆனால் இப்போது பரவலாக 12 மாதத்திற்கு ஒரு குட்டிதான் போடுகிறது. இத்துறையில் ஆராய்ச்சியும் வளர்ச்சியும் தேவை. வெள்ளாடுகள் வளர்ப்பது விவசாயிகளின் வருவாய்ப் பெருக்கத்திற்கு நல்லது. ஆனால் கிராமத்தின் செழிப்புக்கு மூலதனமாக விளங்கக்கூடிய மரங்களை அழித்துவிடும். ஆதலால் வெள்ளாடுகள் வளர்ப்பதை ஊக்குவிக்கக் கூடாது. அப்படியே வளர்ப்பதாக இருந்தால் ஆழ் கூளம் Deeplitter முறையில் வளர்க்கத் திட்டமிட்டு விவசாயிகளை ஈடுபடுத்தலாம். தேவையான பசுந்தழைகளைப் பண்ணையில் வளர்த்துத் தரவேண்டும். இதுபோலவே ஆழ்கூள முறையில் பன்றிகளையும் வளர்க்க விவசாயிகளுக்குப் பயிற்சி தரலாம். இங்ஙனம் பலவகையிலும் கிராமத்தில் மாடு முதலிய பிராணிகளை வளர்த்து வருவாயும் அடையலாம். இத்துறையில் திட்டமிட்ட பணிகள் மேற்கொள்ளப் பெறுதல் வேண்டும்.

கிராமப்புறத்தில் வேலை வாய்ப்பு

கிராமங்களில் வேலை வாய்ப்பு மிகக் குறைவு. வறுமையின் மறு பெயர்தானே வேலையின்மை. இந்திய நாட்டின் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை என்பது வளர்ந்துவரும் கடுமையான் பிரச்சனை. நிலச் சீர்த்திருத்தங்கள் செய்யப் பெற்றாலும்கூட நிலங்களை நிலமற்றவர்களுக்கு விநியோகம் செய்தாலும் கூட, கிராமப்புற வேலை வாய்ப்புப்