பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

21


அரசு சிந்திக்கவேண்டும். இரண்டாந்தரக் குடிமக்களாக ஆகாமல் தடுப்பதற்குரிய முயற்சிகளும் தேவை. ஆதலால் தமிழ் நாட்டளவில் இந்தியைக் கற்பிக்கும் பள்ளிகளை-கல்வி நிலையங்களைப் பொறுத்தவரையில் சிந்தித்து ஒரு முடிவு எடுப்பது உடனடியாகத் தேவை.

-'மக்கள் சிந்தனை' 1-2-83


2. இந்தியா உருவான வரலாறு

ழங்காலத்தில் இந்தியா இன்றுள்ளது போல அகண்ட இந்தியாவாக இருந்ததில்லை; இருந்திருக்க முடியாது. பலப்பல நிலப்பகுதிகளாக மொழி, இனம், மதம், அரசு இன்னபிற அடிப்படையில் பிரிந்துதான் கிடந்தன. அன்று சண்டைகள் நடந்த வண்ணமாக இருந்தன. இந்த அவலத்தை உணர்ந்து எல்லைகளைக் கடந்த அகண்ட இந்தியாவை உருவாக்கப் பலர் சிந்தித்தனர். பலர் போராடினர்.

சிற்றெல்லை தழுவிய சிந்தனைகள் தாழ்ந்தவை; நலம் செய்யாதவை. ஒரு சின்னக் குவளையில் தண்ணீரில் தூசி இருந்தால் அதை ஊற்றி விடுகிறோம். ஆனால் ஆறு, ஏரிகளில் தூசி பார்ப்பதில்லை; பார்க்க முடியாது. அதுபோல எப்போதும் விரிவான எல்லையும் பரந்த நோக்கமும் விரிந்த பார்வையும் தான் மனிதனை மனிதனாக வாழ வைக்கும், சின்னப் புத்திகள் மனிதனைக் கெடுத்து மிருகமாக்கி விடும்.

ஆதலால், அறிவை விரிவாக்கிக் கொள்ள வேண்டும். அறிவை அகண்டமாக்கிக் கொள்ள வேண்டும். நாடு, மொழி, இனம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டுப்பற்று ஆக்கப்பணிகளின் அமைவுக்காகவே தவிர, கெட்டியான எல்லை கட்ட-

கு xiii