பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

357



ஊராட்சி மன்றம்

ஊராட்சி மன்றம், கிராம நிர்வாகச் சார்புடைய நிறுவனம்; அரசாங்க நிர்வாக இயந்திரத்தின் ஒரு சிறப்புமிக்க உறுப்பு. இல்லை - சிறந்த அரசாங்கத்தின் அடிப்படையே ஊராட்சியில்தான் விளங்குகிறது. ஆனால், இன்றைய ஊராட்சிகள் சோளக்கொல்லைப் பொம்மைபோல அமைந்துள்ளன. ஊராட்சிமன்றங்களுக்குப் போதிய அதிகாரங் களும் இல்லை; நிதி ஆதாரங்களும் இல்லை. இன்றைய ஊராட்சிமன்றம் கெளரவஸ்தாபனம் - அவ்வளவுதான்! ஊராட்சி மன்றம் கிராம சமூகத்தினிடத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கி வளர்க்கக் கூடியதாகவும் தேவைப்படும் பொழுது ஒறுத்து நெறிப்படுத்தக்கூடிய நெறி சார்ந்த நீதி நிறுவனமாகவும் உரிமை பெற்று விளங்க வேண்டும். கிராமத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணுதலும் இவை தொடர்பான பணிகளும் ஊராட்சி மன்றத்தினுடையனவாக அமைய வேண்டும். அதற்குரிய அளவான உரிமங்களும் அதிகாரங்களும் ஊராட்சி மன்றங்கள் பெற வேண்டும்.

அடுத்து, ஊராட்சியின் இன்றியமையாத பணிகள் கிராமச் சுகாதாரம்: சுற்றுப்புறச் சூழல் பேணல்: குடி தண்ணீர்; குளியல் நீர் நிலைகளைப் பராமரித்தல். மின் விளக்குகள் எரித்தல் முதலியன. இப்போது இவைகளை ஊராட்சி மன்றங்கள் கவனிக்கின்றன. ஆனால் இந்தப் பணிக்குப் போதிய நிதி வசதி இல்லை; அதிகாரங்களும் இல்லை. ஒரு மின்சார பல்புகூட ஊராட்சிமன்றத் தலைவர் வாங்க உரிமை இல்லை. தவறுகளைத் திருத்த நெறிமுறைப்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு மாறாக ஊராட்சி மன்றங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பிடுங்கிக் கொண்டு ஊராட்சிமன்றத் தலைவர்களையும் மன்றங்களையும் அவமானப்படுத்துவது கிராமங்களின் வளர்ச்சிக்கு எப்படித் துணை செய்ய இயலும்? இத்தகு அணுகு முறைகள் எப்படிச்

கு.xiii.24.