பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

365


உள்ளன. ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வு செய்யுங்கள்! நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் ஏற்றுச் செய்யத்தக்க பரிந் துரைகளை இந்தக் கருத்தரங்கு வழங்கும் என்று நம்பு கின்றோம். இந்திய நாட்டின் கிராமப்புற வளர்ச்சிக்கு இந்தக் கருத்தரங்கு ஒரு ஆற்றல் வாய்ந்த உந்து சக்தியாக விளங்க வேண்டும்;

இன்றைய இந்திய மக்கள் அடியிற்கண்ட மறை மொழியை வாழ்க்கையின் மந்திரமாக ஏற்றுச் செயற்படுத்து வார்களாக! ஒழுகுவார்களாக!

'ஸஹநாவவது, ஸஹ நெள புனக்து,
ஸஹ வீர்யம் சுரவா வஹை
தேஜஸ் விநாவ தீதமஸ்து மா வித்னிஷாவஹை
ஓம் ஷாந்தி ஷாந்தி; ஷாந்தி:
ஷாந்தி ஷாந்தி!


"ஒன்று சேர்ந்து நம்மைக் காத்துக்கொள்வோம்;
ஒன்று சேர்ந்து உண்போம்;
ஒன்று சேர்ந்து விஷயம் பெறுவோம்;
ஒன்று சேர்ந்து அறிவொளி பெறுவோம்
ஒருவரையும் வெறுக்காமல் இருப்போம்;
ஓம் சாந்தி! ஒம் சாந்தி! ஓம் சாந்தி!
11. மானுடம் போற்றி வாழ்க!

"வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்!” என்பது திருமுறையின் ஆணை! ஆம் நமக்கு வாய்த்த சிறப் பான பிறவி. மானிடப்பிறவி! இந்தப் பிறவியும் ஒரேயொரு தடவைதான் வாய்க்குமாம்! "இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?” என்றும் கவலைப்படுகின்றனர்! நாம் அனை _வரும் இந்த மானிடப் பிறப்பின் பயனை நன்றாக