பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

369


ஆள்வினையால் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய பொருள்கள் படைக்கின்றன. உட்பினாலாய வாழ்க்கைக்கு உணவு தேவை. உணவையும் மற்ற நுகர்வுப் பொருள்களையும் படைத்தளிப்பது, அறிவறிந்த ஆள்வினையேயாம். இன்று நம்மில் பலர் வாழ்கின்றோமா! உலக வங்கியின் அறிக்கைப்படி 1988ஆம் ஆண்டில் ஏழைகள் மக்கள் தொகையில் 43.2 சதவிகிதம்; பரம ஏழைகள் 26.1 சதவிகிதம், ஆக நம்மில் பலர் ஏழைகளாகப் பிறந்து ஏழைகளாக வாழ்ந்து ஏழைகளாகவே சாகிறார்கள்! ஏன் இந்தக் கொடுமை? வேலையில்லாதோர் பலகோடி பேர்! தகுதிக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ப வேலை கிடைக்காதோர் பல லட்சம் பேர்! இந்த அவலம் தொடர் கதை ஆவானேன்? பல வீடுகளில் குடும்ப உறுப்பினர்களிடையே உணவில் வேற்றுமை வசதிக் குறைவே காரணம். குடும்பத்தலைவன் நன்கு உண்கிறான்! அதுபோல் உணவு அவன் குடும்பத் தலைவிக்குக் கிடைப்பதில்லை! வளரும் குழந்தைகளில் 17 விழுக்காட்டினருக்கு நல்ல சத்துணவு கிடைக்கவில்லை. இந்தத் துயரக்கதை ஏன் தொடர வேண்டும்? என்பதுதான் விஞ்ஞானி பேராசிரியர் ரங்கராஜன் அவர்களின் வினா! அவர்களைச் சார்ந்த விஞ்ஞானிகளின் வினா! நம்மை நாள்தோறும் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள், நெம்புகோலாக இருந்து தூண்டித்தான் பார்க்கிறார்கள்! நாம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வண்ணம் விழிப்படையவில்லை! பணிகளைச் செய்யவில்லை என்பது உண்மை! ஆயினும் வளர்ச்சி மாற்றங்கள் ஏற்படாமல் போய்விடவில்லை. ஆயினும் போதாது! நம்முடைய மாவட்ட மக்களை வறுமையிலிருந்து மீட்கும்வரை, ஓயாமல் போராட வேண்டும். உண்டும் தின்றும் உடுத்தியும் மகிழக்கூடிய பொருள்களைச் செய்து குவிக்க வேண்டும்!

இந்த உலகியலில் தொகுப்புக்களாக உள்ளனவெல்லாம் எளிதில் அழிவதில்லை. தொகுப்புக்களால் பயன்பாடும்