பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரண் என்று முடிவு செய்வீர்களா? உங்கள் காலச் சமூகத்தை அதன் நிகழ்வுகளை எப்படிக் கணிக்கிறீர்கள்? இன்று இல்லாமல் நாளை இல்லை! ஆதலால், இன்று பட்டம் பெறுகிற மாணவர்களின் ஆர்வம் என்ன? குறிக்கோள் என்ன? என்ற வினாக்களுக்குக் கிடைக்கும் விடையைப் பொறுத்தே நமது நாட்டில் வரலாறு அமையும்.

நமது வாழ்க்கையை நாமே கட்டுமானம் செய்கிறோம் என்ற உண்மையை மாணவ நண்பர்களுக்கு நினைவூட்டுகிறோம். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எண்ணுதல், கற்றல், கேட்டல், செயலாற்றல், உளப்பாங்கியல், இவைகளுக்கேற்ப வாழ்வு கட்டுமானம் பெறுகிறது. “ஒழுக்கம்” என்ற சொல் அகன்ற பொருளுடையது. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்பது திருக்குறள். சௌத்தி ஸ்பென்சர் என்பாரும் "கல்வியின் குறிக்கோள் ஒழுக்க நெறிகளை வளர்த்து ஏற்குமாறு செய்வது” (Education has for its object the formation of character} என்றார். டிஸ்ரேஸி என்ற அறிஞர் "ஒரு நாட்டின் தலைவிதி, அந்த நாட்டு மக்கள் பெறும் கல்வியையே சார்ந்திருக்கிறது” (Upon the education of the people of this country the fate of this country depends) என்று கூறிய அரிய வாசகத்தினை மாணவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். நமது நாட்டுக் கல்வி முறையில் பலகுறைகள்!

கல்வித்துறை அகன்றது. நூல்களைக் கற்பதனால் பெறும் அறிவு மட்டும் கல்வி என்று கொள்வது சரியான கருத்தன்று. காண்கின்ற உலகத்தினை ஊடுருவிப் பார்ப்பதன் மூலமும், இந்த உலகத்தின் போக்கை வரலாற்றுக்கியைய உங்கள் வாழ்நிலையை மாற்றுவதன் மூலமும் பெறும் பட்டறிவும் கூடக் கல்வியேயாம்! இத்தகு பட்டறிவில் கிடைக்கும் அறிவு நுண்ணறிவு, வளரும் வாழ்வியல் மாற்றங் களுடையதேயாம். மாற்றங்கள் வளர்ச்சியின் பாற்பட்டன. இந்த உலகம் எப்படி இருந்தது? எப்படி இருக்கின்றது? என்று