பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்
3. [1]நல்ல நாடு

நாடு-எது நாடு? சேக்கிழார் அமைச்சுப் பணி செய்தவர். நல்ல நாட்டைப் பற்றி அவர் ஒரு சித்திரமே தருகிறார். நாட்டில் நல்ல நீர்வளம் இருக்க வேண்டும்.

சோழநாட்டைக் காவிரி வளப்படுத்தி வாழ்விக்கிறது. பொன்னனைய கதிர்மண்ணிகளைத் தருவதால் ‘பொன்னி’ என்று காவிரி பெயர் பெற்றது. காவிரியின் ஆற்றொழுக்கு அன்னை பராசக்தியின் கருணை போன்றது. ஆம் ! அன்னையின் கருணை அனைவரையும் காக்கும்! அதுபோல், சோழநாடு-அதனில் ஒரு பகுதியாகிய இன்றைய தஞ்சைத் தரணி கோடானு கோடி மக்களுக்கு உணவை வழங்குகிறது. உயிர்க்கொடை அளிக்கிறது. காவிரி நாட்டில் காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்போர் அன்றும் இல்லை! இன்றும் இல்லை!

காவிரி நாடு முழுதும் கழனிகளில் சுறுசுறுப்பாகக் கடமைகள் நிகழும். உழுதசாலில் தெளிந்த சேற்றின் இழுது செய்யினுள் இந்திர தெய்வத்தைத் தொழுது நாற்று நடுவர் என்று சேக்கிழார் கூறுகிறார். உழுத சேறு, கட்டிகளற்றதாக நெய் இழுதுபோல இருந்தது என்று சேக்கிழார் கூறுவது காவிரி நாட்டு உழவர் திறம் காட்டுகிறது. அஃது இன்றைய உழவர்களுக்கொரு பாடம்.

கழனிகளில் கதிர்கள் விளைந்து கிடக்கின்றன. எங்ஙனம்? பக்தியென்பது முனைப்பை முற்றாக அழிப்பது. ஊனினை-உயிரினை உருக்கி உணர்வளிப்பது. அத்தகு பக்தியுடையவர்களிடத்தில் அன்பு உண்டு. எதன் மீது? பலவற்றிலா? பலவற்றின் மீதும் அன்பு–அதாவது ஆண்டவன் மீதும் அன்பு; அரண்மனை மீதும் அன்பு! சங்கரன் மீதும் அன்பு சாதியின் மீதும் அன்பு; கங்காளன் மீதும் அன்பு;


  1. சிந்தனைச் செல்வம்