பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

387


விளங்கியது. பெளதீக அறிவியல் எரிசக்தி அறிவியலாக வளர்ந்து மின்சாரம் வந்தது. இதனால், உணவுப் பொருள்களைப் பக்குவப்படுத்தி உண்கின்ற நாகரிகம் வளர்ந்திருக்கிறது. ஆதிமனிதன் இறைச்சியை முதலில் பச்சையாகவே தின்றான். பின் சுட்டுத் தின்றான். இன்று பக்குவமாகச் சமைத்து உண்கிறான். உணவு முறையில் வளர்ந்து வந்துள்ள வேறுபாடுகள் அறிவியலின் ஆக்கம்தானே!

அடுத்து, உயிரியல் துறை வளர்ந்து வந்துள்ள வேகம்.. அம்மம்ம! பிரமிப்பூட்டுகிறது. இன்று, வேளாண்மையைச் சார்ந்து வளர்ந்து வந்துள்ள அறிவியல்,மனித வாழ்க்கையை இன்ப வாழ்க்கையாக மாற்றியிருக்கிறது. மனிதர்களின் நுகர்வுப் போக்கு அறிவியல் வளர்ச்சிக்குத் துண்டுகோல்; வேளாண்மை, கால்நடை வளர்ப்புத் துறையில் அறிவியல் வளர்ந்து வந்துள்ளது.

தொடக்க காலத்தில் மனிதன் செடி கொடிகள் மரங்களுடன் தொடர்பு கொண்டான். தாவரங்கள் வளர்வதைக் கண்டான், அவற்றிலிருந்து உதிர்ந்த விதைகள் முளைப்பதைக் கண்டான்; ஒடிந்த கிளைகள் மண்ணோடு தொடர்பு கொண்டால் முளைப்பதையும் கண்டான். இந்தப் பார்வை..! அல்ல, ஆய்வு சார்ந்த அணுகும் பார்வை வேளாண்மை விஞ்ஞானமாக வளர்ந்தது. வேளாண்மை விஞ்ஞானம் வளர்ந்ததற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது உழைப்பு.

உழைப்பே வாழ்க்கை உலகத்தின் அச்சு உழைப்பும் அறிவியலும் ஒன்றையொன்று தழுவியன. தனித்தும் இணைந்தும்,வாழ்க்கையை வளர்ப்பன.ஏன்? வாழ்க்கையை ஆக்குவதில் உழைப்பு,அனுபவம்,அறிவியல் என்ற மூன்றுமே இணைந்துள்ளன. அனுபவத்தை விடச்.சிறந்த ஆசிரியன் இல்லை! கைகளை...நீட்டுகிறான்! கம்பு ஒன்று..கையில்