பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கை நல்லவண்ணம் அமைய, புத்தி தேவை. அறிவு என்று குறிப்பிடப்படுவதும், புத்தி என்று குறிப்பிடப் படுவதும் ஒன்றா? வேறு வேறா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் புத்தி என்பது இயற்கையாயமைந்த அறிவாகவும் அறிவு என்பது கற்றல், கேட்டல், செயற்பாடு ஆகியவற்றால் ஈட்டியதாகவும் இருக்கலாமா? இயற்கை அறிவை, “கல்லாதான் ஒட்பம்” என்று திருக்குறள் கூறும். புத்தி என்பது செயற்பாட்டிற்கு வாராத அறிவின் முதல்நிலை என்றும் அதே புத்தி ஆன்மாவிற்குச் செயற்பாட்டு நிலையில் கருவியாக அமைந்து உதவி செய்யும் போது அறிவு என்று பெயர் பெறுகிறது என்று கருதலாமா? மெய்கண்ட நூலில் ஆன்மாவின் அறிகருவிகளில் ஒன்றாகப் புத்தி கூறப்படுகிறது. மக்களின் வாழ்க்கை நிலையில் ‘புத்தி’ என்பது பெருவழக்கில் வழங்கப் பெறுகிறது. இந்தப் புத்தியும் வளரும் தன்மையது. இந்தப் புத்தி, சிந்தித்தும் ஆய்வு செய்தும் தக்க சூழலை அமைத்துக் கொள் வதாலும் வளர்கிறது. புத்தி வளர்ச்சிக்கு ஆய்வு செய்யும் பான்மை வேண்டும். நல்ல புத்தியுடன் பொருந்தி வாழ்தல் அறிவார்ந்த வாழ்க்கை.

மனிதனுக்கு வாழ்நிலை சிறப்பாக அமைய “வாய்த்த மிகச் சிறந்த உறுப்பு சித்தம். சித்தத்தின் தொழில் சிந்தித்தல். சித்தம் என்ற ஒரு கருவி இருப்பதையே இன்று பலர் அறியார். உணரார். இன்று பலர் சிந்திப்பதில்லை. பலர், சிந்திப்பதை மறந்துவிட்டனர். ஏன் இன்னும் பலர் சிந்திப்பதற்கே மறுக்கின்றனர். மதங்கள், சாஸ்திரங்கள் செய்த ஒப்பற்ற கைங்கரியம் மனிதர்களைச் சிந்திக்க விடாமல் செய்ததுதான்! இன்னும் புதுவடிவத்தில் அதிகாரம், பதவி பெயராமல் மக்களைச் சிந்திக்க அனுமதிக்காதவர்கள், பலர். சிந்தித்தல் மனிதனின் முதல்நிலைத் தொழில். சிந்தித்தலைத் தான்” எண்ணுதலும் சிந்தித்தலும் ஒன்றுதானே! ஆய்வுக்குரிய செய்தி! நாம் எண்ணுதலும் சிந்தித்தலும் ஒன்றே என்று கருதுகின்றோம். காலம் விடை