பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

407


தனி வாழ்வியல். சமூக வாழ்வியல் என்று இருவேறு நிலையாக அமைந்துள்ளது என்பது தேற்றம். ஆயினும் ஒன்றையன்றி ஒன்று இல்லை. இந்த அறிவியல் உண்மையை உணர்தல் அவசியம். அதுமட்டுமன்றி ஒவ்வொருவருடைய தனி வாழ்விலும் சமூகத்தின் பங்கே பெரும் பகுதியாக அமைந்து கிடக்கிறது. வாழ்வியல் தேவைகளாகிய காற்று, தண்ணீர், உணவு, உணர்வு, அறிவு, மகிழ்ச்சி இவை எல்லாமே சமூகம் உயிர்க்கும் – வழங்கும் கொடைகள் என்பதனை அறிக. தனி உடைமையும் பண மதிப்பீட்டுச் சமுதாயமும் வளர்ந்த பிறகு வேண்டுமானால் பணத்தைக் கொண்டு, சந்தையில் எதையும் பெறலாம் என்ற துணிவில் பலர் சமூகத்தை – உயிர்குலத்தை பேணுவதில்லை. வளர்ப்பதில்லை. உயிர்ப்பினைத் தந்து வாழ்விக்கும் உயிரிக் காற்று (Oxygen) சந்தையில் பணத்தினால் வாங்க முடியுமா? வாழ்வதற்குரிய மூச்சுக் காற்றினை மரங்கள், தாவரங்கள் வழங்கினாலொழிய வேறுவழியில்லை.

ஆதலால் மரங்களை, தாவரங்களை வளர்க்காமல் அவற்றை நாளும் அழித்து வந்ததன் விளைவாக இன்று மழைவளம் குறைந்திருக்கிறது. எந்த ஒரு மனிதனாவது. தன்னிடத்தில் அதிகம் கேட்காமல், கேட்டுத் தொல்லை கொடுக்காமல் அவனுக்கு உயிர்க் காற்றினைத் தந்தும் அவன் வாழும் புவிக்கோளத்தினை வெப்பதட்பத்தினைப் பராமரித்தும் மழையை வரவழைத்து தீர்வளம் பெருக்கியும் உணவுப் பண்டமாகப் பயன்பட்டும் மருந்துப் பொருளாக நோய் நீங்கியும் வாழ்வளிக்கும் மரங்களின்றி மானுடம் இல்லை என்ற அறிவியல் உண்மையை உணர்ந்துள்ளனரா? ஒரு நொடிப்பொழுது மரங்கள் வளர்ப்பில் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றனரா? அதுதான் இல்லை! என்று மானுடன் மரங்களை, தாவரங்களைப் பேணி வளர்க்கத் தலைப்படுகின்றானோ அன்றுதான் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவான். நாள்தோறும் நூறாயிரக்கணக்கான