பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

413


எழுந்து நின்று பணிகளைச் செய்யும் ஆன்மா - வலிமையுடைய ஆன்மா.


“நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
            நரகத்தில் இடர்ப்படோம் நடலை பல்வோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
            இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்கும் குடியல்லாத தன்மை யான
            சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்னும் மீளா ஆளாய்க்
      கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே!”

(திருநாவுக்கரசு சுவாமிகள்: 6-961)


“உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே யெமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்”

(திருவெம்பாவை. 19)

என்றெல்லாம் பாடப் பெற்றுள்ள பாடல்கள் ஆன்ம வலிமைக்குச் சான்றுகளாகும். ஆயினும் ஆன்மாவுக்கு வலிமை சேர்க்கவும் பெற்ற வலிமையைப் பாதுகாக்கவும் துணை தேவை! அங்ஙனம் ஆன்மா நாடி அணையும் துணை வகை இரண்டு. ஒன்று மானுடத் துணை. மானுடத் துணையும் இரண்டு வகையின. ஒருதுணை காதல் வழியது. பிறிதொரு துணை நட்பின் வழியது. இவ்விரண்டும் வகைபட அமைந்தால் வலிமை மிகும். நல்ல காதலி அமைந்தால் இகழ்வார் முன் ஏறு போல் நடக்கலாம் என்று திருவள்ளுவர்