பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

425


மக்களது சமயம் இறை, உயிர், தளை என்ற மூன்று அடிப்படையில் தோன்றி வளர்ந்து விரிவடைந்துள்ளது. உயிர் இயல்பாகவே பாசத் தளையொடு பின்னிக் கிடக்கிறது. தளையினின்றும் விடுபெற்று, இயல்பாகவே பாசங்களினின்றும் விடுபெற்று இன்பப் பரம்பொருளாய் இலங்கும் சிவபெருமானின் திருவடிகளைச் சார்தலின்மூலம் பிறப்பிறப்புக்களினின்றும் விடுபெற்று, வற்றாத முற்றாத திருவருள் இன்பத்தில் திளைத்து வாழ்கிறது. இதுவே நமது சைவ சித்தாந்த செந்நெறியின் விழுமிய கருப்பொருள். விரிப்பிற் பெருகும், தொகுப்பில் எஞ்சும், காலமின்மை கருதி முடிக்கின்றோம்.

தமிழர் சமயநெறி

தமிழினம் தமக்கென ஒரு சமயநெறி கொண்டு வாழ்ந்தது. அதுவே சைவ சித்தாந்த நெறி. தமிழினத்தின் சமயப் பண்புகளைப் பற்றிப் பேராசிரியர் சுநிதிக் குமார் சாட்டர்ஜி கூறுவது நம்முடைய நினைவிற்குரியதாகும். வினைப்பயன் பற்றிய கோட்பாடு, பிறப்பிறப்பு பற்றிய கொள்கை, சிவம், அன்னை, திருமால் ஆகிய தெய்வங்களை மையமாகக் கொண்ட ஆன்மீகக் கருத்துக்கள். தீ வேள்விக்கு மாறான வினைமுறைகளை உடைய பூசை என்ற வழிபாட்டு முறை முதலியன தமிழர் வாழ்வினின்றே மற்றையவர்கள் மேற்கொண்டனர் என்பது. திருத்தந்தை ஹீராஸ் ஐரோப்பிய நாகரிகத்தின் இரு கூறுகளாகிய உலகியல் நாகரிகம் ஆன்மீக நாகரிகம் ஆகிய இரண்டிற்குமே மூல முதல் தமிழர் நாகரிகமே என்று இப்பொழுது அறியத் தொடங்கியுள்ளோம் என்று கூறுகிறார். சைவ சித்தாந்தக் கொள்கையானது தமிழரது பேரறிவின் சிறந்த பயன் என்று போய் ஐயர் தமது திருவாசக மொழி பெயர்ப்பின் முகவுரையில் கூறியுள்ளார். இக்கருத்தைக் கனம் கவுடி என்னும் பாதிரியாரும் விரிவாக எடுத்து விளக்கியுள்ளார். அவர் சொல்லுவதாவது. சைவ